Vijay: கல்யாண மேடையில் விஜய் மகன்.. கையில் அப்பா மாதிரியே பிரேஸ்லெட் போட்டு இருக்காரே!

சென்னை: நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவில் இயக்குநராக களமிறங்கியுள்ளார். விஜய் சினிமாவில் இருந்து விலகுகிறேன் என அறிவித்ததால் வருத்தம் அடைந்த ரசிகர்களுக்கு விஜய் மகன் சினிமாவில் காலடி எடுத்து வைப்பது என்பது, பலருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் விஷயமாக அமைந்தது. இதற்கு முன்னர் விஜய் படங்களின் இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்த ஜேசன் சஞ்சய், இப்போது முதல் முறையாக வெளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அங்கு தனது தந்தையைப் போலவே கையில் பிரேஸ்லெட் அணிந்து இருந்தது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜேசன் சஞ்சய் வெளிநாட்டிற்குச் சென்று இயக்குநர் ஆவதற்கு சிறப்பு படிப்பினை மேற்கொண்டார். படிப்பு முடித்து வந்த பின்னர் தனது இயக்கத்தில் படத்தை இயக்க தயாராகி வந்தார். அப்படி இருக்கும்போது, இவர் இயக்கும் படத்தை லைகா தயாரிக்கவும் முன் வந்தது. சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். இப்படி இருக்கும்போது, படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளது.

Vijay Vijay Son Jason Sanjay

விஜய் தனது கடைசி படத்தில் நடித்து வருகிறார். ஜன நாயகன் என பெயர் வைக்கப்பட்ட இந்த படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது என்ற பேச்சும் உலா வருகிறது, அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவும் அதிக வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்பில் தீவிர கவனமாக இருக்கும் விஜய், படப்பிடிப்பு இல்லாத காலத்தில் தீவிர அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

Vijay Vijay Son Jason Sanjay

ஜேசன் சஞ்சய்: இப்படி இருக்கும்போது, பாமக-வின் கௌரவத் தலைவர் ஜி.கே. மணியின் இல்லத் திருமண விழாவில் விஜய்க்கு பதிலாக அவரது மகன் ஜேசன் சஞ்சய் கலந்து கொண்டுள்ளார். சேலத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தில் கலந்து கொள்ள நேற்று மாலையே சென்னையில் இருந்து சேலத்திற்கு வந்தார் ஜேசன். இவர் வந்த விமானத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் வந்திருந்தார்கள். விமான நிலையத்தில் இவர்கள் வந்த வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Vijay Vijay Son Jason Sanjay

பிரேஸ்லெட்: அதேபோல் ஜேசன் சஞ்சய் திருமண வரவேற்பு விழா மேடைக்கு சென்று, மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர் கையில் விஜய் அணிந்து இருப்பதைப் போல பிரேஸ்லெட் அணிந்து இருந்தார். அவர் கையில் அணிந்திருந்த பிரேஸ்லெட் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. தந்தையைப் போல மகனும் கடவுள் நம்பிக்கையில் உறுதியாக இருக்கிறார் என்ற பேச்சுகள் அடிபடுகிறது. விஜய், 'ஜீசஸ்' என எழுதப்பட்ட பிரேஸ் லெட் அணிந்து இருப்பார். அதேபோல் ஜேசன் சஞ்சயும் அணிந்து இருப்பதால் இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Vijay Vijay Son Jason Sanjay

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X