ஷங்கர் மகள் திருமணத்தில் விஜய்யின் மகன்.. அப்பாவுக்கே டஃப் கொடுப்பாரு போலயே.. டிரெண்டாகும் போட்டோ!

சென்னை: இயக்குனர் ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவின் திருமணம் சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் விக்ரம், சூர்யா, கார்த்தி, மணிரத்தினம் என பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய நிலையில், மறுநாள் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில், நடிகர் விஜய்யின் மகன் கலந்து கொண்ட போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

இயக்குநர் ஷங்கர் மற்றும் ஈஸ்வரி தம்பதியினருக்கு ஐஸ்வர்யா ஷங்கர், அதிதி ஷங்கர், அர்ஜித் ஷங்கர் என இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அதில் அதிதி ஷங்கர் விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். தற்போது இவர் தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

Vijay son sanjay at shankar s daughter Aishwarya wedding

ஐஸ்வர்யா ஷங்கர்: ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கு கடந்த 2022ம் ஆண்டு மகாபலிபுரத்தில் திருமணம் நடந்தது. இவர்களின் திருமணம் கொரோனா காலத்தில் நடைபெற்றதால், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே விழாவில் கலந்து கொண்டனர். திருமணத்தில் பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ள முடியாமல் போனதால், சென்னையில் திருமண வரவேற்பு நடத்தப்படும் என ஷங்கர் கூறியிருந்தார். இதற்காக பிரம்மாண்டமாக செட் போடப்பட்டு திருமணத்தை விட தடபுடலாக வரவேற்பு நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், கடைசியில் வரவேற்பு நடைபெறவில்லை.

பிரம்மாண்ட திருமணம்: ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா முதல் கணவருடன் ஆறு மாதங்கள் கூட சேர்ந்து வாழாமல் இருவரும் சட்டப்படி பிரிந்துவிட்டனர். இதையடுத்து, ஐஸ்வர்யா சட்டப்படி விவாகரத்து பெற்று, தருண் கார்த்திகேயன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் நடைபெற்ற இந்த திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், சீயான் விக்ரம், சூர்யா, கார்த்திக், மணிரத்னம், சுஹாசினி, நயன்தாரா, விக்னேஷ் சிவன் என ஒட்டுமொத்த திரைப்பிரபலங்களும் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தினார்கள். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது.

Vijay son sanjay at shankar s daughter Aishwarya wedding

விஜய்க்கே டஃப் கொடுக்கும் மகன்: இதையடுத்து மறுநாள் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில், அஜித்தின் மனைவி ஷாலினி தனது மகன் மற்றும் மகள் ஆகியோருடன் கலந்து கொண்டார். அதேபோல் விஜய் மனைவி சங்கீதா கலந்து கொண்ட புகைப்படமும் இணையத்தில் வெளியான நிலையில் தற்போது விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சையும் கலந்து கொண்ட புகைப்படம் இப்போது வெளியாகி இருக்கிறது. அந்த போட்டோவில் ஜேசன் சஞ்சை அப்பா விஜய்க்கே டஃப் கொடுக்கும் வகையில் மிகவும் அழகாக போஸ் கொடுத்துள்ளார்.

விறுவிறுப்பான வேலைகள்: ஜேசன் சஞ்சய், லண்டனில் திரைக்கதை எழுதுவதில் பட்டமும், டொராண்டோ ஃபிலிம் ஸ்கூலில் திரைப்படத் தயாரிப்பில் டிப்ளமோவும் முடித்துள்ளார். இவர் இதற்கு முன் "புல் தி ட்ரிக்கர்" என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். தற்போது இவர், லைகா தயாரிக்கவுள்ள படத்திற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் தொடர்ந்து படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X