ஏ.ஆர். ரஹ்மான் மகனுக்கு விஜய் மகன் வீடியோ காலில் ஆறுதல்.. வைரலாகும் போட்டோ!

சென்னை : சில நாட்களுக்கு முன்பு ஏ.ஆர். ரஹ்மான்,விக்ரம், இயக்குனர் சங்கர் ஆகியோரின் மகன்கள் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோ சமூக வலைதளங்களில் வைரலானது.

தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் இளையதளபதி விஜயின் மகன் சஞ்சய் இப்பொழுது கனடாவில் பிலிம் மேக்கிங் படிப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று விஜய் மகன் சஞ்சய் ஏ.ஆர். ரஹ்மான் மகனுடன் வீடியோ காலில் பேசியுள்ள போட்டோ இப்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொங்கலுக்கு வெளியாக

பொங்கலுக்கு வெளியாக

தொடர் வெற்றி திரைப்படங்களால் தமிழ் சினிமாவில் முறியடிக்க முடியாத வசூல் மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் இப்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துவருகிறார்.மேலும் இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக தயாராக உள்ளது.

65வது திரைப்படத்தில்

65வது திரைப்படத்தில்

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து கோலமாவு கோகிலா படத்தின் மூலம் அறிமுகமாகியும் இப்பொழுது சிவகார்த்திகேயன் நடித்து வரும் டாக்டர் திரைப்படத்தையும் இயக்கியும் வரும் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தனது 65வது திரைப்படத்தில் நடிக்க உள்ள செய்தி வெளியாகி இன்றுவரை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பிலிம் மேக்கிங் படிப்பு

பிலிம் மேக்கிங் படிப்பு

நடிகர் விஜய்க்கு சஞ்சய் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் இருக்கும் நிலையில் வேட்டைக்காரன் திரை படத்தில் மகன் சஞ்சய் விஜய்யுடன் இணைந்து இன்ட்ரோ சாங்கில் நடனமாடி தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார், மேலும் சஞ்சய் இப்பொழுது கனடாவில் பிலிம் மேக்கிங் படிப்பு படித்து வரும் நிலையில் சில குறும்படங்களையும் இயக்கி வருங்கால பிலிம் மேக்கராக தயாராகி வருகிறார்.

Recommended Video

Rio குழந்தை Rithi ஏன் வரவில்லை Rio மனைவி விளக்கம் - Filmibeat Tamil
வீடியோ காலில் ஆறுதல்

வீடியோ காலில் ஆறுதல்

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். திரைப் பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருந்த நிலையில், நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் அமீனுக்கு வீடியோ காலில் பேசி ஆறுதல் கூறி இருந்தார். இந்த செய்தி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வரும் நிலையில் இப்பொழுது இவர்களின் இந்த வீடியோ கால் ஸ்கிரீன் ஷாட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X