»   »  விஜய் நடித்த 'செல்ஃபி புள்ள' ரோமானியாவில் வைரல் ஆக காரணம் தெரியுமா?

விஜய் நடித்த 'செல்ஃபி புள்ள' ரோமானியாவில் வைரல் ஆக காரணம் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான 'கத்தி' படத்தில் இடம்பெற்ற 'செல்ஃபி புள்ள' பாடல் வீடியோ ரோமானியா நாட்டில் வைரலாகி வருகிறது. காரணம் "புள்ள" என்ற வார்த்தைக்கான ரோமானிய மொழி அர்த்தம் தான்.

ரோமானிய நாட்டின் ஒளிபரப்பாகும் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் செல்ஃபி புள்ள பாடலை சிறிது நேரம் ஒளிப்பரப்பி, பாடல் குறித்த உரையாடலை நடத்தியுள்ளனர்.

கிராமப்புறங்களில் பெண் குழந்தைகளை செல்லமாக ஏ புள்ள... என்று அழைப்பார்கள். அந்த வார்த்தையை வைத்து லெட்ஸ் டேக் எ செல்ஃபி புள்ள.... உம்மா உம்மா என்று விஜய் படத்திற்கு பாடல் எழுதப்பட்டது.

விஜய் மற்றும் சமந்தா இந்த பாடலுக்கு நடனமாடியிருந்தனர். 'லெட்ஸ் டேக் எ செல்ஃபி புள்ள.... உம்மா உம்மா' பாடல் வரிகள் ரோமானியாவில் வைரலாகி வருகிறது. யூ-டியுபில் சுமார் 7.97மில்லியன் பேர் விஜய்யின் 'செல்ஃபி புள்ள' பாடல் வீடியோவை பார்வையிட்டுள்ளனர். புள்ள எனும் வார்த்தைக்கு ரோமானிய மொழியில் தவறான அர்த்தம் கூறப்படுவதே இப்பாடல் வைரலாக காரணம் என்கிறார் அந்த நாட்டைச் சேர்ந்த டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர்.

விஜய் நடித்து வெளியாகியுள்ள தெறி படத்தின் பெயர் மலையாள ரசிகர்களை வருத்தமடையச் செய்தது. காரணம் தெறி என்ற வார்த்தை கெட்ட வார்த்தையாக கூறப்பட்டது. இப்போது புள்ள என்ற வார்த்தையும் தவறான வார்தையாக கூறப்படுகிறது.

இனிமே தமிழ் பாட்டுக்கு வரிகள் எழுதும் முன்பு அதற்கு வேற மொழியில தப்பான அர்த்தம் இருக்கான்னு பார்க்கணும் போல இருக்கே.

English summary
A song from a popular Indian movie has suddenly gone viral in Romania... because it sounds like it's about penises.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil