விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும்.. படத்தின் தலைப்பு என்ன? எதிர்பார்ப்பை தூண்டிய போஸ்டர்!

சென்னை: நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா தயாரிப்பில் புதிய படம் ஒன்றினை இயக்கி வருகிறார். இப்படத்தில் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் நடித்து வருகிறாத்ர. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படம் குறித்த மாஸ் அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தந்தையைப் போல ஹீரோவாக அறிமுகமாவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். இவரை ஹீரோவாக்க வேண்டுமென 'பிரேமம்' அல்போன்ஸ் புத்திரன் உள்ளிட்ட பலரும் முயற்சி செய்தனர். ஆனால், தாத்தாவை போல இயக்குனர் அவதாராம் எடுத்துள்ளார். சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் குறித்த அறிவிப்பு பிறகு படம் குறித்த எந்தவிதமான அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இதையடுத்து, படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது.

Vijay Jason sanjay yca Productions
Photo Credit:

ஜேசக் சஞ்சய்: விஜய்யின் மகன் குறும்படங்களை இயக்கி இருந்தாலும், பெரிய திரைப்படத்தை இயக்கி அவருக்கு அனுபவம் இல்லாததால், ஜோசப் சஞ்சயின் பெரியப்பா சஞ்சீவ் என்பவரை அதாவது விக்ராந்தின் அண்ணனை லைகா நிறுவனம் நியமித்து உடன் இருந்து பணிகளை கவனித்து கொள்ளும்படி அறிவுறுத்தியாக செய்திகள் வெளியானது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பும் துவங்கி சத்தமில்லாமல் நடந்து வந்தது.

படத்தின் தலைப்பு என்ன: இந்நிலையில் இப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் படத்தின் தலைப்பு நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து, இன்று படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கையில் கத்தையோடு வைத்து இருக்கும் பணம் தீயில் எரிவது போல இருக்கிறது. ஜேசன் சஞ்சய் இப்படத்திற்கு ஆங்கிலத்தில் சில தலைப்புகளை யோசித்து வைத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், இன்று வெளியாகி இருக்கும் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜனநாயகன்: நேற்று தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'தளபதி கச்சேரி' லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'ஜனநாயகன்'. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம் மேனன், ப்ரியாமணி, நரேன், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 9 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X