Vijay speech: அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா.. விஜய் அதிரடி பேச்சு!

சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் நூலை வெளியிட, அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். இரண்டாம் பிரதியை ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவும், மூன்றாம் பிரதியை ஆதவ் அர்ஜூனாவும், நான்காம் பிரதியை விகடன் குழுமத் தலைவர் சீனிவாசனும் பெற்றுக் கொண்டனர்.

இதில், நடிகர் விஜய் பேசினார்.இதில், பேசிய விஜய் நூல் வெளியீட்டுவிழாவில் கலந்து கொள்வதை நான் மிகப்பெரிய வரமாக கருதுகிறேன். இன்றும் பல பேருக்கு பிடித்தமான இடமாக இருப்பது நியூயார்க். ஆனால், 100 வருடத்திற்கு முன்பே நியூயார்க் சென்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் வென்று சாதித்த ஒரு அசாத்தியமானவராக இருந்தார், அவர் தான் அண்ணல் அம்பேத்கர்.

Vijay Ambedkar book

வைராக்கியம்: ஆனால், அவர் எந்த சூழ்நிலையில் படித்தார் என்றால், நீ எல்லாம் படிப்பதற்கே லாயக்கில்ல, நீ எல்லாம் படித்து என்ன செய்யப் போற, நீ என் பள்ளிக்கூடம் வருகிறாய் என்று அவரை விமர்சனம் செய்தவர்கள் மத்தியில் அவர் படித்தார். அதையும் மீறி அவர் படிப்பதற்கு பள்ளிக்கூடம் சென்றால் சகா மாணவர்களோடு அவரால் அமரக்கூட முடியாது, அவருக்கு அங்கு குடிப்பதற்கு தண்ணீர் கூட கிடைக்காது. இத்தனை இடையூறுகளுக்கு மத்தியிலும், ஒரே ஒரு சக்தி மட்டும் அவருக்கு உந்துதோளாக இருந்தது. அதுதான் அவர் மனதிற்குள் இருந்த வைராக்கியம் அது அவரை உந்திக் கொண்டே இருந்தது. அந்த வைராக்கியம் தான் அந்த மாணவரை பிற்காலத்தில் இந்த நாட்டின் மிகப்பெரிய ஆளுமையாக மாறுவதற்கும் காரணமாக இருந்தது என்றார்.

மக்களே மைனஸாக்கி விடுவார்கள்: தொடர்ந்து பேசிய அவர், மக்களை மதிக்கா, மக்களின் சமூக நீதியான பாதுகாப்பை உறுதி செய்யாத, கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி, இரு மாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாளம் முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு, என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை, நீங்கள் உங்களுடைய சுயநலத்திற்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தும், 2026 மக்களே மைனஸ் ஆக்கி விடுவார்கள் என்று அதிரடியாக பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X