Leo Success meet - கப்பு முக்கியம் பிகிலு.. லியோ சக்சஸ் மீட்டில் அரசியல் பிரவேசத்தை உறுதி செய்தாரா விஜய்?

சென்னை: Leo Success Meet (லியோ சக்சஸ் மீட்) லியோ சக்சஸ் மீட்டில் விஜய் பேசியதை வைத்து அவர் தனது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்திருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் கடந்த 19ஆம் தேதி வெளியானது. பெரும் எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தியது. ஆனால் பொதுவான ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறது. பழைய கதை, திரைக்கதையில் ஒன்றுமே இல்லை என படத்துக்கு ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்துகொண்டிருக்கின்றன.

Vijay Speech in Leo Movie Success Meet

பாக்ஸ் ஆபிஸ்: விஜய் நடிப்பில் ஏற்கனவே வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக அடி வாங்கின. இதனால் லியோ விமர்சன ரீதியாக கொண்டாடப்பட வேண்டும் என்ற கட்டாயத்தில் விஜய்யும், அவரது ரசிகர்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்க்காத வகையில் விமர்சன ரீதியாக அடி வாங்கியிருக்கிறது. அதேசமயம் வசூலில் லியோ நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் வசூலை தொட்டுவிட்டதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய் நடிப்பு சூப்பர்: படத்தின் கதையும், திரைக்கதையும் விமர்சனத்தை சந்தித்தாலும் விஜய்யின் நடிப்பை பலரும் கொண்டாடிவருகின்றனர். நடுத்தர வயது தந்தையாக விஜய் தனது பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தப் படத்திலிருந்து விஜய்யை கழித்துவிட்டால் ஒன்றுமே கிடையாது என்று ரசிகர்கள் கூறுகின்றனர். அவர்களின் கூற்றுக்கேற்றபடிதான் விஜய்யின் நடிப்பும் இருந்தது.

சக்சஸ் மீட்: இந்நிலையில் லியோ படத்தின் சக்சஸ் மிட் நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டிருந்த சூழலில் சக்சஸ் மீட் நடத்தப்பட்டதால் விஜய் ரசிகர்கள் அவரது குட்டி ஸ்டோரியை எதிர்பார்த்து இருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக விஜய்யும் ஒரு குட்டி ஸ்டோரியை சொன்னார்.

குட்டி ஸ்டோரி: அவர் பேசுகையில், "ஒரு காட்டுல யானை, புலி, காக்கா, கழுகு, மான் என நிறைய மிருகங்கள் இருந்துச்சு. காட்டுக்கு ரெண்டு பேர் வேட்டைக்கு போனாங்க. ஒருத்தர் வில் அம்போட போய் முயல பிடிச்சிட்டு வந்தாரு. இன்னொருத்தர் ஈட்டியோட போயி யானைக்கு குறி வெச்சு ஒன்னும் இல்லாம வந்தாரு. இதுல யார் வெற்றியாளர்? நிச்சயமா யானைக்கு குறி வெச்சவர்தான் வெற்றியாளர். எப்பவும் பெரிய விஷயங்களுக்கே கனவு காணுங்க" என்றார். இந்தக் கதையின் மூலம் விஜய் ரஜினிகாந்த்துக்கு பதிலடி தந்துவிட்டதாக அவரது ரசிகர்கள் பேசினர்.

கப்பு முக்கியம் பிகிலு: இந்நிலையில் நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் விஜய்யிடம் 2026ஆம் ஆண்டு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த விஜய், அந்த வருடம் கால்பந்து போட்டி நடக்கவிருக்கிறது. கப்பு முக்கியம் பிகிலு என்றார். விஜய்யின் இந்த பதிலை கேட்ட ரசிகர்கள் கண்டிப்பாக 2026ஆம் ஆண்டு தான் அரசியலுக்கு வருவது உறுதி என்பதைத்தான் இந்த பதில் மூலம் உணர்த்தியிருக்கிறார் தளபதி என்று உற்சாகத்தோடு கரகோஷம் எழுப்பினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X