Vijay: இனி அரசியல் தான்.. தவெக வேட்பாளர் நேர்காணலில் உருக்கமாக பேசிய விஜய்!
சென்னை: பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தில் விருப்ப மனு அளித்த 60 பேரிடம் முதற்கட்டமாக இன்று விஜய் நேர்காணல் செய்தார். அப்போது, விஜய் பலரிடம் நம்பிக்கைக்குரிய வகையில், உருக்கமாக பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு மாதத்திற்குள் வர உள்ளது. தேர்தல் தேதி மார்ச் இறுதிக்குள் அறிவிக்கப்பட்டு விடும் என்பதால், தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பல்வேறு அரசியல் கூட்டணி, வேட்புமனுத்தாக்கல், தேர்தல் அறிக்கை, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. மேலும், கட்சிகள் சார்பில் விருப்ப மனு விநியோகம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தவெக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்களுக்கான விருப்பமனு கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி முதல் பிப்ரவரி 14ஆம் தேதி வரை வழங்கப்பட்டது.

தவெக தலைவர் விஜய் நேர்காணல்: இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகம் சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் இன்று விஜய் தனது கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேர்காணல் செய்தார். மாநில நிர்வாகிகளுடன் தனித்தனியாக நேர்காணல் நடத்திய விஜய். மாவட்ட செயலாளர்கள், மற்றவர்களிடம் ஐந்தைந்து பேராக சேர்த்து நேர்காணலை நடத்தினார். இதில், நம்பிக்கை கூறிய சிலரிடம் வெளிப்படையாக பேசிய விஜய், எல்லாவற்றையும் விட்டுவிட்டு அரசியலுக்கு வந்து விட்டேன், இனி அரசியலைத் தவிர எனக்கு ஒன்றும் இல்லை. நான் அரசியலுக்கு வந்த பிறகு நடப்பது எல்லாம் உங்களுக்கே நன்றாக தெரியும். இனி துணிந்து வேலைகளை பாருங்கள்.
இனி அரசியல் தான்: எனக்கும் என் கட்சிக்கும் நம்பிக்கைக்குரியவர்களாக நீங்கள் இருப்பீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு அதிகமாகவே இருக்கிறது. உங்கள் தொகுதியில் வெற்றி பெற வேண்டியது உங்கள் கடமை, அதற்காக முழு மூச்சாக நீங்கள் உழைக்க வேண்டும். அதே போல, மாவட்ட செயலாளர்களாக இருப்பவர்கள் தங்கள் போட்டியிடும் தொகுதியில் மட்டுமின்றி, மற்ற தொகுதியில் இருக்கும் வேட்பாளர்கள் வெற்றி பெருவதற்கும் உழைக்க வேண்டும் என்று பேசிய விஜய், பூத் கமிட்டி உறுப்பினர்கள் முறையாக நியமித்துள்ளார்களான என்பதை நேர்காணலின் போது விஜய் கேட்டு தெரிந்து கொண்டார்.


Click it and Unblock the Notifications











