Friends தயவு செய்து புரிஞ்சுக்கோங்க.. விஜய்யை டென்ஷன் ஆக்கிய ரசிகர்கள்.. நடந்தது என்ன?

சென்னை: நடிகர் விஜய் கட்சி தொடங்கிய பிறகு மிகவும் பிஸியாக வலம் வருகிறார். இன்று காலை கோவை சென்ற அவருக்கு ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். விஜய் ரோட் ஷோ சென்றபோது அந்த வேனில் ஏறிய ரசிகரை பார்த்ததும் விஜய் அதிர்ச்சியடைந்தார். பின்னர், அவருக்கு அன்பு வேண்டுகோள் வைத்து கீழே இரங்க விஜய் உத்தரவிட்டார். இதுதொடர்பான வீடியோவும் வெளியானது. இந்த சூழலில் நடிகர் விஜய் நடத்தி வரும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. அது என்ன என்பதை இதில் காணலாம்.

அரசியலில் தீவிரமாக களம் கண்டு வரும் விஜய்க்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் மற்றும் தமிழக மக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படப்பிடிப்பும் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வருகிறது. இப்படத்தை அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பிரியாமணி, பாபி தியோல் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். விஜய் நடிக்கும் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்த நிலையில், தவெக பூத் கமிட்டி நிர்வாகிகளின் முதல் கருத்தரங்கு கோவை குருவம்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று நடைபெற்றது.

Vijay spoke to fans at the TVK meeting in coimbatore

வாக்குவாதம்: இதில், பங்கேற்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் சென்றடைந்தார். அப்போது அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த பூத் கமிட்டி கூட்டத்தில் நாமக்கல், ஈரோடு, சேலம், ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தொண்டர்களும், ரசிகர்களும் வந்திருந்தனர். அப்போது பாதுகாவலர் ஒருவர் தவெக் நிர்வாகியின் அடையாள அட்டையை கிழித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவருடன் விஜய் ரசிகர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர். பிறகு விசாரித்த போது, அடையாள அட்டையில் தாெண்டரின் புகைப்படம் இல்லை என தெரியவந்துள்ளது. அப்போது வாக்குவாதம் முற்றி உள்ளே அனுமதிக்காவிட்டாலும் பரவாயில்லை ஏன் புகைப்படத்தை கிழித்தீர்கள் என்று சண்டை போட்டுள்ளனர்.

தயவு செய்து புரிஞ்சுக்கோங்க: விஜய் தலைமையில் நடந்த முதல் பூத் கமிட்டி கூட்டத்தில் விஜய் பேசும்போது ஒரே சச்சரவு ஏற்பட்டிருக்கிறது. இதை பார்த்து விஜய்யும் கொஞ்சம் கடுப்படைந்துவிட்டதாக தெரிகிறது. பின்னர், தவெக தொணடர்களிடம் மைக்கை பிடித்து பேசிய விஜய் வழக்கமாக தனது ஸ்டைலில் பேச ஆரம்பித்திருக்கிறார். விஜய் போட்ட அன்பு கட்டளை என்னவென்றால், Friends அங்கு நிறைய wire போகிறது. உங்க பாதுகாப்புக்காக சொல்றேன். கொஞ்சம் பின்னாடி வந்திடுங்க. இன்னும் 3 மணி நேரம் உங்க கூடதான் இருக்க போகிறேன். தயவு செய்து புரிஞ்சுகோங்க என தெரிவித்துள்ளார். அவரது பேச்சுக்கு மரியாதை கொடுத்த ரசிகர்கள் கூட்டத்தில் கூச்சல் போடாமல் தலைவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டனர்.

விஜய்யின் நண்பர் வருகை: கோவையில் பிரம்மாண்டமாக நடைபெறும் பூத் கமிட்டி கூட்டத்தில் விஜய்யின் கல்லூரி முதல் சினிமா வரை அவருடன் பயணித்து வரும் ஸ்ரீநாத் வருகை தந்துள்ளார். தவெக கட்சியின் துண்டை தோளில் போட்டபடி கூட்டத்தில் கலந்துகொண்டார். இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. மேலும் பல திரை பிரபலங்களும் இந்த கூட்டத்திற்கு வந்திருப்பதாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X