ஹரா இயக்குநரின் “ஆசை ஆசை” ஆல்பம் பாடல்.. காதலின் புதிய இசை அலை!
சென்னை: ஹரா, பவுடர் போன்ற படங்களை இயக்கி ரசிகர்களிடம் தனித்த அடையாளம் பெற்ற இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி, இப்போது தனது புதிய முயற்சியாக "ஆசை ஆசை" என்ற ஆல்பம் பாடலை எழுதி இயக்கியுள்ளார். இந்த பாடல், இன்றைய தலைமுறையின் நவீன காதல் உணர்வுகளை மென்மையாக வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆல்பம் பாடலில் "ஹரா" திரைப்படத்தின் நாயகி அனித்திரா நாயர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவரவிருக்கிறார். இசையமைப்பாளர் பிரசாந்த் அரவிந்த் இதற்காக இனிமையும் உணர்ச்சியும் கலந்த மெல்லிசை ஒன்றை வழங்கியுள்ளார். ஒளிப்பதிவு பிரகத் முனுசாமி என்பவரால் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. அவரின் கேமிரா கண் ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய மலைப்பகுதிகளின் இயற்கை அழகை உயிர்ப்பாகப் பதிவு செய்துள்ளது. படத்தொகுப்பை லோகேஷ்வர் மேற்கொண்டுள்ளார், தயாரிப்பு அம்புலி ராஜி அவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆசை ஆசை ஆல்பம்: இந்த ஆல்பம் பாடலின் இசை வெளியீட்டை பிரபல இசை நிறுவனம் ஸ்டார் மியூசிக் மேற்கொள்கிறது. தற்போது வெளியாகியுள்ள "ஆசை ஆசை" பாடல், அதன் மெட்டும் காட்சியுமாக ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயற்கையின் மத்தியில் பிறக்கும் காதல், இசையின் வழியாக பரவும் உணர்ச்சி இந்த ஆசை ஆசை ஆல்பம் பாடல் வெளிப்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











