pooja hegde:கொஞ்சம் கூட குறையாத வலி.. பூஜா ஹெக்டேவுக்கு ஆப்ரேஷன்.. அய்யோ என்னாச்சு..பதறிய பேன்ஸ்!

சென்னை: நடிகை பூஜா ஹெக்டேவுக்கு திடீர் அறுவைச் சிகிச்சை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மிஸ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இதுவரை 15 படங்களில் நடித்துள்ளார்.

Vijay starrer Beast heroine pooja hegde surgery in leg

விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் தமிழ்ப் படங்களில் அடுத்தடுத்து கமிட்டாக முடியும் என்று எதிர்பார்த்து பூஜா ஹெக்டே காத்திருந்த நிலையில், படத்திற்கு நெகடிவ் கமெண்ட்டுகள் வந்தால், தமிழில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாமல் போனது.

நடிகை பூஜா ஹெக்டே: தமிழில் ராசி இல்லாத நடிகை என பெயர் எடுத்த பூஜா ஹெக்டே மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார். தற்போது இவர் சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரித்து வரும் ஜன கன மன என்ற படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஒப்பந்தமாகி உள்ளார்.

Vijay starrer Beast heroine pooja hegde surgery in leg

குண்டூர் காரம்: அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படத்தில், பூஜாவுக்கு மிரட்டலான ஒரு ஆக்ஷன் காட்சி இருப்பதாக கூறப்படுகிறது. அந்த அக்ஷன் காட்சிக்காக வெளிநாட்டு பயிற்சியாளரிடம் பயிற்சி எடுத்து வருகிறார். மேலும் மகேஷ்பாபுவிற்கு ஜோடியாக "குண்டூர் காரம்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 13ம் தேதி சங்கராந்திக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திடீர் அறுவை சிகிச்சை: நடிகை பூஜா ஹெக்டேவுக்கு ராதே ஷ்யாம் படத்தில் நடித்தபோது காலில் வலி ஏற்பட்டது. இதற்காக அவர் கடந்த ஆண்டு அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார். ஆனால், வலி குறையாததால், மற்றொரு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதனால்தான் அவர் படங்களில் இருந்து விலகி இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பூஜா ஹெக்டே தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்ற போதும் ரசிகர்கள் இந்த செய்தியை கேள்விப்பட்டு இணையத்தில் நலம் விசாரித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X