பீஸ்ட் இதனால் தான் பிளாப்பா ?... அந்த நிறுவனம் தான் காரணம்!
சென்னை : பீஸ்ட் படம் பிளாப்பானதற்கு அந்த நிறுவனம்தான் காரணம் என்று கூறப்படுகிறது.
நெல்சன் திலீக்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே,யோகிபாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன் நடிப்பில் வெளியானத் திரைப்படம் பீஸ்ட்.
இப்படம் ஏப்ரல் 13ந் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

பீஸ்ட்
ஒரு ஷாப்பிங் மாலுக்குள் தீவிரவாதிகள் புகுந்து கொண்டு அங்கிருக்கும் பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துக் கொள்கிறார்கள். சிறையில் இருக்கும் பாகிஸ்தான் பயங்கரவாதியை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க என்ன செய்வது என்று அரசு திகைக்கிறது.

பழைய கதை
இதில் அரசுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரியாக செல்வராகவன் நடித்திருக்கிறார். பீஸ்ட் திரைப்படம் வெளியான உடன் விஜய்யின் ரசிகர்கள் படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை, இதேபோன்ற கதையை 20 வருஷத்திற்கு முன்பே விஜய்காந்த் நடித்துவிட்டார் என்று நெட்டிசன்ஸ் கலாய்க்கத் தொடங்கிவிட்டனர். ஒரு சிலர் படம் நன்றாக இருப்பதாக தெரிவித்தனர்.

வரவேற்பு இல்லை
தமிழ்நாட்டில் போட்ட பணத்தை சன் டிவி திரும்ப எடுத்துவிட்டது. ஆனால், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நஷ்டத்தோடு படம் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யை கொண்டாடும் கேரளா, மலேசியா போன்ற இடங்களில் கூட பீஸ்ட் படத்திற்கு சரியான வரவேற்பு இல்லை.

கேரளாவில் பிளாப்
கேரளாவில் பீஸ்ட் படத்தை வாங்கிய நிறுவனத்திற்கு சில கோடிகள் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. யாஷ் நடித்த கேஜிஎப் 2 படத்தையும் அதே நிறுவனம் தான் வாங்கி வெளியிட்டுள்ளது. இரண்டு படங்களும் அந்த நிறுவனத்தின் கையில் இருந்ததால், விஜய் ரசிகர்கள் அதிகம் இருக்கும் கேரளாவிலேயே பீஸ்ட் பிளாப் ஆகி இருக்கிறது. பீஸ்ட் கேரளாவில் பிளாப் ஆனதற்கு ஒரே நிறுவனம் வாங்கியது தான் காரணம் என்று கூறுப்படுகிறது.


Click it and Unblock the Notifications