பீஸ்ட் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. கேஜிஎஃப் 2வுக்கெல்லாம் பயந்து ஓடுற ஆளா நான்!

சென்னை: நடிகர் விஜய்யின் பீஸ்ட் ரிலீஸ் தேதியை சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ளது.

ஏப்ரல் மாதம் பீஸ்ட் திரைப்படம் தியேட்டர்களை தெறிக்கவிடும் என எதிர்பார்த்ததை போலவே ஏப்ரல் மாதமே படம் வெளியாகிறது.

கேஜிஎஃப் சாப்டர் 2 ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் நிலையில், பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகும் என எதிர்பார்த்த நிலையில், அதற்கெல்லாம் பயப்படுற ஆள் நான் கிடையாது என்பதை விஜய் நிரூபித்து இருக்கிறார்.

தளபதி 65

தளபதி 65

நடிகர் விஜய்யின் 65வது படத்தை யார் இயக்கப் போகிறார் என்கிற கேள்வி எழுந்தது. ஏ.ஆர். முருகதாஸ் முதல் வெற்றிமாறன் வரை ஏகப்பட்ட பெயர்கள் அடிபட்டன. இறுதியில் டாக்டர் படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் தேர்வானார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் மீண்டும் நடிக்கப் போகிறார் என்ற அறிவிப்பு வந்ததுமே ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்தனர்.

டைட்டிலே வெறித்தனம்

டைட்டிலே வெறித்தனம்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து மிகப்பெரிய ஹிட் கொடுத்த விஜய்யின் அடுத்த படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என ஏகப்பட்ட யூகங்கள் கிளம்பின. டார்கெட் ராஜா என ஃபேக்கான ஒரு டைட்டில் போஸ்டருடனே வைரலானது. ஆனால், பீஸ்ட் என அதிகாரப்பூர்வ டைட்டிலை அறிவித்ததும் விஜய் ரசிகர்கள் பீஸ்ட் மோடுக்கு மாறிவிட்டனர்.

எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி உள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என வெறித்தனமான போஸ்டருடன் சன் பிக்சர்ஸ் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த தேதியில் தான் பீஸ்ட் வெளியாகும் என தகவல்கள் வெளியான நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் டேட்டை லாக் செய்துள்ளது.

ரெண்டுமே செம ஹிட்

ரெண்டுமே செம ஹிட்

இதுவரை அனிருத் இசையில் வெளியான பீஸ்ட் படத்தின் இரு பாடல்களுமே உலகளவில் டிரெண்டாகி வருகிறது. சிவகார்த்திகேயன் வரிகளில் வெளியான அரபிக் குத்து பாடலில் விஜய் போட்ட நடனத்துக்கு ஏகப்பட்ட சினிமா நடிகைகள் டான்ஸ் ஆடி தீர்த்தனர். இந்நிலையில், சமீபத்தில் வெளியான ஜாலி ஓ ஜிம்கானா பாடல் ரசிகர்களை செம ஜாலி மூடுக்கு கொண்டு சென்றது.

ஜாலி மூடு வேணாம்

ஜாலி மூடு வேணாம்

ஜாலியோ ஜிம்கானா பாடலால் ஜாலியாக இருந்தாலும், விஜய் ரசிகர்கள் வெறித்தனமான போஸ்டருடன் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட வேண்டும் என சமூக வலைதளங்களில் வைத்த கோரிக்கை சன் பிக்சர்ஸ் காதுகளுக்கு எட்டி விட்டது. கையில் துப்பாக்கியுடன் போர்க்களத்தில் விஜய் இருக்கும் வெறித்தனமான புதிய போஸ்டரை சன் பிக்சர்ஸ் தற்போது வெளியிட்டு விஜய் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.

Recommended Video

Vijay Fans Ask For Beast Update From Mohammad Shami | Filmibeat Tamil
கேஜிஎஃப் பார்த்து பயமில்லை

கேஜிஎஃப் பார்த்து பயமில்லை

கன்னட திரைப்படமான கேஜிஎஃப் படத்தின் சேப்டர் 2 திரைப்படம் ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகும் என விஜய்யின் ஹேட்டர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து இருந்தனர். எவன் வந்தாலும் மோதி பார்க்கணும்டா என ஜாலியோ ஜிம்கானா பாடலில் விஜய் பாடியதை போலவே கேஜிஎஃப் உடன் மோதி பார்த்து பாக்ஸ் ஆபிஸில் தனது மாஸை காட்ட தயாராகி விட்டார் விஜய் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X