ஏஜென்ட் விக்ரம் உடன் லியோ.. பர்த்டே பார்ட்டியில் கலந்து கொண்ட ரோலக்ஸ்.. அமீர்கானும் இருக்காரே!
சென்னை: கமல்ஹாசனின் பிறந்தநாள் கொண்டாட்டம் நவம்பர் 6 முதல் 7ம் தேதி இரவு வரை பல பிரபலங்களின் வாழ்த்து மழையால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
உலகநாயகன் என ரசிகர்களால் மட்டுமின்றி பல பிரபலங்களாலும் கொண்டாடப்படும் யூனிவர்ஸல் நாயகன் கமல்ஹாசனின் 69வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

தனக்கு வாழ்த்து சொன்ன திரையுலக பிரபலங்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கு கமல் நன்றி தெரிவித்து வந்தார். நடிகர் விஜய் கமலுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் மற்றும் கமல் பிறந்தநாளில் கலந்து கொண்ட அமீர்கான், சூர்யா புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளன.
ஏஜென்ட் விக்ரம் உடன் லியோ: லோகேஷ் கனகராஜின் எல்சியூவுக்குள் கமல் நுழைந்த நிலையில், லியோ படம் மூலம் விஜய்யும் உள்ளே நுழைந்துள்ளார். லியோ படத்தின் கிளைமேக்ஸில் ஏஜென்ட் விக்ரம் லியோவுடன் பேசிய நிலையில், கமல்ஹாசன் உடன் அப்போது விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இதுவரை வெளியிடாமல் இருந்து வந்த நிலையில், விஜய்யின் அட்மின் ஜெகதீஷ் கமல் பிறந்தநாளை முன்னிட்டு அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சூர்யா, அமீர்கான்: கமல் பிறந்தநாள் விழாவில் நடிகர் சூர்யா மற்றும் அமீர்கான் கலந்து கொண்ட தகவல்கள் வெளியான நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் அந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும், இயக்குநர் விக்னேஷ் சிவன் முதல் பல திரையுலக பிரபலங்களும் கமல் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு அவருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளனர்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜும் கமல்ஹாசன் பிறந்தநாளில் பங்கேற்ற புகைப்படங்களை வெளியிட்டு தனது ஆண்டவரை வாழ்த்தி இருந்தார். தலைவர் 171 படத்தை முடித்து விட்டு கைதி 2 படத்தில் பெரிய சம்பவத்தை செய்ய வேண்டும் லோகேஷ் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இந்தியன் 2, தக் லைஃப், இந்தியன் 3, கமல் 233, கைதி 2, விக்ரம் 3 மற்றும் கல்கி என அடுத்தடுத்து தனது ரசிகர்களுக்கு கமல் ட்ரீட் கொடுக்க காத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











