விஜய் சூர்யா எல்லாம் ஓகே.. நம்ம கான்ட்ராக்டர் நேசமணியை மறக்க முடியுமா.. ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் மக்களே!

சென்னை: நடிகர் விஜய் மற்றும் நடிகர் சூர்யா இணைந்து நடித்த படங்களில் ஒன்று ப்ரண்ட்ஸ். இந்த படம் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியானது. படம் வெளியாகி 24 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் படத்தின் காமெடி காட்சிகள் இன்றைக்கும் ஃப்ரஸ் கன்டென்ட். நேசமணி என்ற வடிவேலுவின் கதாபாத்திரம் மொத்த படத்தையும் காலத்திற்கும் கொண்டாடும் படமாக மாற்றியது. இப்படி இருக்கையில் ப்ரண்ட்ஸ் படம் இன்று அதாவது நவம்பர் மாதம் 21ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது.

ப்ரண்ட்ஸ் படம் கடந்த 2001 ஆம் இயக்குநர் சித்திக்கின் இயக்கத்திலும் கோகுல் கிருஷ்ணாவின் வசனத்திலும் வெளியான படம். இது மலையாளத்தில் வெளியான ப்ரண்ட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக். படத்தின் விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா, ராதாரவி, மதன்பாபு, தேவயானி, விஜயலட்சுமி, சரிதா என பலரும் நடித்துள்ளார்கள். படத்தின் பெரிய பிளஸ்ஸே படத்தின் முதல் பாதியில் இடம் பெற்றுள்ள காமெடி காட்சிகள்தான்.

Vijay Suriya Vadivelu Friends Movie Re-Release Today November 21st With 4K Quality After 24 Years
Photo Credit:

நேசமணி: படத்தின் காமெடிக் காட்சிகளை இன்றைக்கும் பார்த்தாலும் வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் அளவுக்கு காட்சிப்படுத்தி இருப்பார்கள். இது மட்டும் இல்லாமல் படத்தின் பல காட்சிகளில் இடம்பெற்றுள்ள டெம்ப்ளேட்கள் மீம் கிரியேட்டர்களுக்கு வலு சேர்த்து வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதத்தில் உலகத்தையே ஒரு கலக்கு கலக்கியது என்றால் அது இந்த படம் சம்பந்தப்பட்ட காட்சிதான். டிவிட்டர் தளத்தில் ஒருவர், சிறிய ரக சுத்தியலின் புகைப்படத்தை பகிர்ந்து இது என்ன என்று கேட்டார். அதற்கு குசும்பு பிடித்த நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த இணைய வாசி ஒருவர், ப்ரண்ட்ஸ் படத்தில் வடிவேலு ( நேசமணி) தலையில் சுத்தியல் விழுந்த காட்சியை, உண்மையிலேயே நடந்ததைப் போல விளக்கினார். மேலும் இது படத்தின் காட்சி என்று சொல்லாமல் விட்டுவிட்டார். இதனால் பதறிப்போன கேள்வி கேட்ட இணையவாசி, நேசமணியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்களா இல்லை என்று கேட்டுவிட்டு, #PrayforNesamani என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டார். அதை பலரும் ரீ-ட்வீட் செய்ய, உலக அளவில் ட்ரெண்டானது.

Vijay Suriya Vadivelu Friends Movie Re-Release Today November 21st With 4K Quality After 24 Years
Photo Credit:

ரீ ரிலீஸ்: இப்படியான ஹாஷ்டேக் டிரெண்ட் ஆன பின்னர், நக்கலும் நையாண்டித்தனமும் நிறைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இணையவாசிகள், நேசமணிக்கு உடல்நிலை அப்படி உள்ளது, இப்படி உள்ளது, அவரைக் கொல்ல முயற்சி செய்தது அரவிந்த் மற்றும் சந்துரு என்ற இரண்டு அப்ரசண்டிகள் என்று எல்லாம் பதிவிட ஒரு வாரத்திற்கு மேலாக இணையத்தை அலறவைத்தது நேசமணி ஹேஷ்டேக். இப்படி இணையத்தையே அலறவிட்ட இந்த படம் இன்று ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. படத்தில் விஜய்யின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்தவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ரண்ட்ஸ் படம் இன்றைக்கு ரீ ரிலீஸ் ஆகிறது என்று போஸ்ட் போட்டுள்ளார். இதுவும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ப்ரண்ட்ஸ் படம் 4கே தரத்தில் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X