Leo Update - என்னது லியோவில் இப்படி ஒரு பாடலா?.. லோகேஷ் கொடுத்த சர்ப்ரைஸ்.. ஆச்சரியப்பட்டுப்போன விஜய்
சென்னை: Leo Third Single (லியோ மூன்றாவது சிங்கிள்) லியோ படத்தில் இப்படியும் ஒரு பாடல் இருக்கிறதா என விஜய் ரொம்பவே சர்ப்ரைஸ் ஆகியிருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் அந்தப் படம் கண்டிப்பாக மெகா ஹிட்டாகும் என்று விஜய்யின் ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையில் இருக்கின்றனர். ஏனெனில் இதற்கு முன்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த விக்ரம் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ட்ரெய்லர்: சூழல் இப்படி இருக்க படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 5ஆம் தேதி ரிலீஸானது. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் எதிர்பார்த்ததைவிடவும் படம் ஸ்டைலிஷாகவும், ஆக்ஷனாகவும் வந்திருப்பது உறுதியாகியிருப்பதாக கொண்டாடுகின்றனர். அதேசமயம் ட்ரெய்லரில் விஜய் கெட்ட வார்த்தை பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல் அளவுக்கதிகமான வன்முறை காட்சிகளும் இடம்பெற்றிருப்பதாக ஒரு கருத்து எழுந்திருக்கிறது.
ப்ரீமியர் ஷோ: சூழல் இப்படி இருக்க லியோ படத்தின் சிறப்பு காட்சிக்கான அனுமதியும் கிடைத்திருக்கிறது. எனவே லியோ படத்தின் மூலம் விஜய்க்கு செம ட்ரீட் கிடைத்திருக்கிறது. குறிப்பாக பட ரிலீஸ் நாளை ஒரு திருவிழா நாள் போல் கொண்டாட தயாராகிவருகின்றனர். எனவே கண்டிப்பாக படம் பல படங்களின் வசூல் சாதனைகளை அசால்ட்டாக முறியடிக்கும் என்றும் இப்போதே விஜய் ரசிகர்கள் கூறுகின்றனர்.
பாடல்கள்: படத்திலிருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் முதலில் வெளியான நா ரெடிதான் பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனையடுத்து Bad Ass என்ற இரண்டாவது சிங்கிள் வெளியானது. நேற்று லியோவின் மூன்றாவது சிங்கிளான அன்பெனும் பாடல் வெளியானது. பாடலின் லிரிக்கல் வீடியோவை பார்த்த ரசிகர்கள் லோகேஷ் கனகராஜ் படத்தில் இப்படி ஒரு மெலோடியா என ஆச்சரியப்பட்டார்கள். மேலும் விஜய்க்கும் த்ரிஷாவுக்குமான கெமிஸ்ட்ரி அட்டகாசம் என்றும் கமெண்ட்ஸ் செய்தனர்.
சர்ப்ரைஸ் விஜய்: இந்நிலையில் அன்பெனும் பாடலுக்கு ரசிகர்கள் மட்டுமின்றி விஜய்யுமே சர்ப்ரைஸ் ஆகியிருக்கிறார். பாடலை எழுதிய விஷ்ணு எடவன் இதுகுறித்து பேசுகையில், "லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் அன்பெனும் ஆயுதம் என்ற மெலோடி ஜானர் பாடல் இருப்பதை கேட்டு ரொம்பவே விஜய் ஆச்சரியப்பட்டார். அந்த பாடலை கேட்ட பிறகு எடிட் டேபிளுக்கு வந்த விஜய் என்னை கட்டி அணைத்து பாராட்டினார். மேலும் பாடல் வரிகள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது என்றும் கூறினார்" என்றார்.


Click it and Unblock the Notifications











