விஜய் பேசிய அந்த ஒரு விஷயம்.. கட் செய்ய சொன்ன இயக்குனர் அட்லி.. பின்னணியில் நடந்தது என்ன?

சென்னையில் விபத்தில் பலியான சுபஸ்ரீ குறித்து நடிகர் விஜய் பேசியதில் பெரும்பகுதியை கட் செய்துவிட்டதாக ரசிகர்கள் கொந்தளித்து உள்ளனர்.

Recommended Video

Vijay Speech at Bigil Audio Launch : விஜய் பேசிய அந்த ஒரு விஷயம்-வீடியோ

சென்னை: சென்னையில் விபத்தில் பலியான சுபஸ்ரீ குறித்து நடிகர் விஜய் பேசியதில் பெரும்பகுதியை கட் செய்துவிட்டதாக ரசிகர்கள் கொந்தளித்து உள்ளனர்.

நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடந்தது. இந்த விழா நேற்று தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

என்ன பேசினார்

என்ன பேசினார்

இந்த நிலையில் எல்லோரும் எதிர்பார்த்தது போலவே நடிகர் விஜய் இந்த நிகழ்ச்சியில் பேனர் பிரச்சனை தொடங்கி பல்வேறு சமூக பிரச்சனைகள் குறித்து விளக்கினார். விஜய் தனது பேச்சில், பேனர் விழுந்து, லாரி ஏறி சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் நிறைய விஷயங்கள் நடந்து விட்டது.

செய்யவில்லை

செய்யவில்லை

இதில் யார் மீது கோவப்பட வேண்டுமோ அவர்கள் மீது யாருமே கோபம் கொள்ளவில்லை. தேவையில்லாமல் லாரி டிரைவர் மீதும் பேனர் அச்சடித்தவர் மீதும் புகார் கூறுகிறார்கள். இவர்களுக்கு எதிராக நீங்கள் ஹேஷ்டேக் போடுவீர்கள் என்று நம்புகிறேன். சமூக வலைத்தளங்களை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும்., என்று குறிப்பிட்டார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் விஜய் பேசியதில், தேவையில்லாமல் லாரி டிரைவர் மீதும் பேனர் அச்சடித்தவர் மீதும் புகார் கூறுகிறார்கள். கைது செய்ய வேண்டியவர்களை கைது செய்யவில்லை, என்று வாசகத்தை நேற்று கட் செய்துவிட்டார்கள். நேற்று டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான போது இந்த வாசகம் வரவே இல்லை.

ரசிகர்கள் கோபம்

ரசிகர்கள் கோபம்

இதையடுத்து நேற்று ரசிகர்கள் இணையத்தில் இதனால் கோபம் அடைந்தனர். ஏன் விஜய் பேசிய அந்த வசனத்தை கட் செய்தீர்கள். விழாவில் நடந்த மிக முக்கியமான விஷயமே அதுதான். அதை ஏன் கட் செய்துவிட்டு ஒளிபரப்புனீர்கள் என்று கேள்வி எழுப்பினார்கள்.

இயக்குனர் தரப்பு

இயக்குனர் தரப்பு

இயக்குனர் தரப்புதான் இப்படி கட் செய்ய சொன்னதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அந்த குறிப்பிட்ட வார்த்தைகளை ஒளிபரப்ப வேண்டாம் என்று இயக்குனர் அட்லிதான் கேட்டுக்கொண்டார். அவரும் தயாரிப்பாளர் தரப்பும் கேட்ட பின்தான் இதை கட் செய்து ஒளிபரப்பியதாக கூறுகிறார்கள்.

சர்ச்சை அழுத்தம்

சர்ச்சை அழுத்தம்

தேவையில்லாத சிக்கல் மற்றும் சர்ச்சை வேண்டாம் என்று படக்குழு கருதியதால் இப்படி கட் செய்ததாக பேசிக்கொள்கிறார்கள். அதேபோல் படக்குழுவிற்கு இது தொடர்பாக அழுத்தங்கள் தரப்பட்டு இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X