Vijay - என்னை பாதித்த விஷயம் என்றால் அது ஒன்றுதான்.. உருக்கமாக பேசிய விஜய்.. ட்ரெண்டாகும் வீடியோ
சென்னை: Vijay (விஜய்) நடிகர் விஜய் தன்னை பாதித்த விஷயம் குறித்து பேசிய வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
கோலிவுட்டின் டாப் 3 ஹீரோக்களில் ஒருவர் விஜய். சினிமாவில் நடிக்க வந்த புதிதில் ஏகப்பட்ட விமர்சனங்களையும் கிண்டல்களையும் சந்தித்த அவர் இளைய தளபதியாக வளர்ந்து தற்போது தளபதியாக மாறி நிற்கிறார். அதற்கு ஒரே காரணம் அவரது உழைப்புதான்.

தன் மீது தொடுக்கப்பட்ட அத்தனை விமர்சன அம்புகளையும் எதிர்கொண்டு திறமையை வளர்த்து தற்போது தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.
லியோ வசூல்: அவரது நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட், வாரிசு, லியோ ஆகிய மூன்று படங்களுமே விமர்சன ரீதியாக அடி வாங்கின. இருந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய ரெஸ்பான்ஸை பெற்றிருப்பதாக அந்தந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கின்றன. அதன்படி அந்த மூன்று படங்களுமே வரிசையாக 100 கோடி ரூபாயை தாண்டி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
முற்றுப்புள்ளி: இதன் காரணமாக அடுத்த சூப்பர் ஸ்டார் எங்கள் தளபதிதான் என்று விஜய் ரசிகர்கள் தொடர்ந்து கூறினர். இதனையொட்டி ரஜினி ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் பஞ்சாயத்தும் ஆரம்பித்தது. ஆனால் லியோ படத்தின் சக்சஸ் மீட்டில் விஜய்யின் பேச்சு அந்த பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது என்றே கூற வேண்டும்.
தளபதி 68 அப்டேட்: அவர் இப்போது தனது 68ஆவது படத்தில் நடித்துவருகிறார். படத்தை வெங்கட் பிரபு இயக்க; ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் சமீபத்தில்தான் தொடங்கியது. முதலில் சென்னையில் ஆரம்பித்த படப்பிடிப்பு அடுத்ததாக பாங்காக்கில் நடந்தது. தற்போது துருக்கியில் ஷூட்டிங் நடந்துவருகிறது.
விஜய் தங்கை: இதற்கிடையே விஜய்க்கு வித்யா என்ற ஒரு தங்கை இருந்தார். அவர் உடல்நல குறைவால் சிறு வயதிலேயே உயிரிழந்துவிட்டார். அவரது உயிரிழப்பிலிருந்துதான் விஜய் இவ்வளவு அமைதியாகிவிட்டார் என்றும் பலர் கூறுவார்கள். இந்நிலையில் தனது தங்கை குறித்து விஜய் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
ஒரு நிகழ்ச்சியில் பேசிய விஜய், “எனது வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய விஷயம் என்னவென்றால் அது என் தங்கை வித்யாவின் உயிரிழப்புதான். அதிலிருந்து மீள்வது கடினம். ஆனால் ஒன்று எனது தங்கையை நாங்கள் புதைக்கவில்லை. விதைத்திருக்கிறோம். அதனால்தான் எனக்கு இவ்வளவு தங்கைகள் இருக்கிறார்கள்” என்றார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்களும், ரசிகைகளும் கண்டிப்பாக உங்களுக்கு தம்பிகளாகவும், தங்கைகளாகவும் நாங்கள் இருக்கிறோம் விஜய் அண்ணா என்று சமூக வலைதளத்தில் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











