TVK Vijay: எவ்வளவு சொல்லியும் திருந்தல.. தொடங்கியது மாணவர்கள் அலப்பறை.. நொந்து போன தவெக!

சென்னை: தமிழ்நாடே தற்போது பரவலாக பேசிக்கொண்டு இருக்கும் விஷயங்களில் ஒன்றாக இருப்பது நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் வழங்கி வருவது தொடர்பாகத்தான். கடந்த ஆண்டே விஜய் தனது ரசிகர் மன்றத்தின் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தொகுதி வாரியாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவர்களை நேரில் அழைத்து அவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

Vijay Tamilaga Vettri Kazhagam TVK

கடந்த ஆண்டு விஜய் இதுபோன்ற கல்வி உதவித்தொகை வழங்கியதை பாராட்டி பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மேலும் கடந்த ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுசேரி மாணவர்களுக்கு ஒரே நாளில் நாள் முழுவதும் நின்றுகொண்டே மாணவர்களுக்கு கல்வித் ஊக்கத்தொகை வழங்கினார். ஒருகட்டத்திற்கு மேல் தனது கால் வலியை பொருத்துக் கொள்ள முடியாத விஜய் மேடையில் வைக்கப்படிருந்த மேஜையைப் பிடித்த வண்ணம் நின்றார்.

Vijay Tamilaga Vettri Kazhagam TVK

இந்த காட்சிகளைப் பார்த்த பலரும், தனது கால் வலியையும் பொருட்படுத்தாமல் விஜய் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையை வழங்கியது பாராட்டக்குரியது எனக் கூறினர். மேலும் கல்வி ஊக்கத்தொகை கொடுக்கும் விழா விஜய் தரப்பில் இருந்து திட்டமிடப்பட்ட நேரத்தைக் கடந்தும் சென்றது. அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது, மாணவர்கள் விஜய்யுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள எடுத்துக் கொண்ட நேரம், விஜய்யிடம் ஆட்டோகிராஃப் வாங்க எடுத்துக் கொண்ட நேரம் மற்றும் விஜய்யுடன் சினிமா போஸ்டர் பாணியில் போட்டோ எடுத்துக் கொள்ள எடுத்துக் கொண்ட நேரம் அனைத்தும் விழாவை திட்டமிட்ட நேரத்தில் முடிக்க முடியாமல் போனது.

Vijay Tamilaga Vettri Kazhagam TVK

இரண்டு கட்டங்கள்: இதனால் இம்முறை கல்வி ஊக்கத்தொகை இரண்டு நாட்கள் பிரித்து வழங்கப்போவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்றும் வரும் 3ஆம் தேதியும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகின்றது. இந்நிலையில் மாணவர்களை சென்னைக்கு அழைத்து வந்த கட்சி நிர்வாகத்தினர் மாணவர்களிடமும் அவர்களது பெற்றோர்களிடமும் மிகப்பெரிய வேண்டுகோளாக வைத்தது, கடந்தமுறையே விழா திட்டமிட்ட நேரத்தைக் கடந்து அதிக நேரம் எடுத்துக் கொண்டது.

Vijay Tamilaga Vettri Kazhagam TVK

மாணவர்கள் சேட்டை: அதற்கு முக்கியமான காரணம் மாணவர்கள் கல்வி ஊக்கத்தொகையை வாங்கிவிட்டு, விஜய்யுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டது, சினிமா போஸ்டர்கள் பாணியில் போட்டோ எடுத்துக் கொண்டது மற்றும் ஆட்டோகிராஃப் வாங்கியதற்கு என அதிகப்படியான நேரம் எடுத்துக்கொண்டது. எனவே இம்முறை மாணவர்கள் இதனைத் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டது.

Vijay Tamilaga Vettri Kazhagam TVK

அதிர்ச்சியில் தவெக: மேலும் மேடைக்குச் செல்பவர்கள் செல்போன், பேனா, நோட்டு புத்தகம் கொண்டு செல்ல கூடாது எனவும் அறிவுருத்தப்பட்டது. இதனால் செல்போன், பேனா, நோட்டுப்புத்தகம் ஆகிவை இல்லாமல் மேடைக்குச் சென்றாலும், மாணவ - மாணவிகள் விஜய்யுடன் இணையத்தில் டிரெண்டாகும் போஸ்களில் புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர். இது தவெக நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் விஜய் தொடர்ந்து சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்துக் கொண்டும் இருக்கின்றார்.

Vijay Tamilaga Vettri Kazhagam TVK

இணையவாசிகள் கருத்து: மாணவர்களின் இந்த செயலுக்கு ரசிகர்கள் பலரும் இணையவாசிகள் பலரும் " மாணவர்கள் ஏன் இப்படிச் செய்யறாங்க, பாவம் அந்த மனுஷன் எத்தனைப் பேருக்கு நின்னுட்டே இதே மாதிரி கொடுக்கனும். போன வருஷமே விஜய் கால் வலியால் ரொம்ப அவதிப்பட்டாரு" என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Vijay Tamilaga Vettri Kazhagam TVK

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X