காவியை கிழிக்கும் விஜய்.. தில்லான அரசியல் குறியீடு.. பீஸ்ட் டிரைலர் பற்றி ப்ளூ சட்டை மாறன் ட்வீட்!

சென்னை: பீஸ்ட் டிரைலர் வெளியானதும் புதிய படத்தின் டிரைலரை பார்த்த எஃபெக்ட்டே இல்லை என ரசிகர்கள் ஒரு பக்கம் புலம்பி வருகின்றனர்.

அப்படியே மணி ஹெய்ஸ்ட், கூர்கா, மால் காப், டை ஹார்ட் படங்களின் காப்பி போலவே படம் இருப்பதாக மீம்களை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

இந்நிலையில், ப்ளூ சட்டை மாறன் விஜய் பீஸ்ட் டிரைலரில் காவியை கிழித்து அரசியல் குறியீட்டை வெளிப்படுத்தியிருக்கிறார் என போட்டுள்ள ட்வீட் பரபரப்பை கிளப்பி உள்ளது.

பீஸ்ட் டிரைலர் காப்பியா

பீஸ்ட் டிரைலர் காப்பியா

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வரும் ஏப்ரல் 13ம் தேதி வெளியாகவுள்ள பீஸ்ட் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உலகளவில் டிரெண்டாகி வருகிறது. அதே சமயம் படம் மணி ஹெய்ஸ்ட் காப்பி என்றும் மால் காப் காப்பி என்றும் கூர்கா படத்தின் காப்பி என்றும் அஜித் ரசிகர்கள் மீம்களை போட்டு தெறிக்கவிட்டு வருகின்றனர்.

ஹெயிஸ்ட்டானாவே அப்படித்தான்

ஹெயிஸ்ட்டானாவே அப்படித்தான்

மணி ஹெயிஸ்ட் படத்தின் காப்பி என நெட்டிசன்கள் பீஸ்ட் டிரைலரை பங்கம் செய்து வரும் நிலையில், ஹெயிஸ்ட் படம்னாலே அப்படித்தான் இருக்கும். வேறு எந்த ஹெய்ஸ்ட் படத்தையும் நீங்க பார்க்கவில்லையா? மணி ஹெய்ஸ்ட், கூர்காவுடன் கம்பேர் பண்ணாதீங்க என விஜய் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

விஜய் மிரட்டியிருக்காரு

விஜய் மிரட்டியிருக்காரு

டாக்டர் படத்தின் டிரைலரை பார்க்கும் போதும் இது அப்படியே கோலமாவு கோகிலா டிரைலர் மாதிரியே இருக்கே என ரசிகர்கள் கமெண்ட் அடித்த நிலையில், டாக்டர் படத்தை பார்த்த பின்னர் தியேட்டரில் விழுந்து விழுந்து சிரித்து அந்த படத்தை வேற லெவல் ஹிட் ஆக்கினர். விஜய்யின் வெறித்தனமான நடிப்பு ஒன்று போதும் இந்த படத்தை பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்க வைக்க என விஜய் ரசிகர்கள் நம்பிக்கையுடன் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

காவியை கிழிக்கும் விஜய்

காவியை கிழிக்கும் விஜய்

ஸ்க்ரீனை கத்தியால் கிழித்தபடி விஜய் கில்லர் லுக் கொடுக்கும் ஃபர்ஸ்ட் சீன் செம மாஸாக இருந்த நிலையில், அந்த ஸ்க்ரீனின் கலரை நோட் செய்து காவி கலரை கிழிக்கிறார் விஜய் என ஒரு க்ரூப் கம்பு சுற்றி வருகிறது. வெள்ளை சட்டையில், சிகப்பு ரத்தம், தீவிரவாதிகளை அழிக்கும் காட்சிகள் என மற்ற எதுவுமே இவர்களின் கண்ணுக்கு தெரியவில்லையா என விஜய் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

ப்ளூ சட்டை மாறன் ட்வீட்

ப்ளூ சட்டை மாறன் ட்வீட்

"பீஸ்ட் டிரைலர்: காவியை கிழிக்கும் விஜய். தில்லான அரசியல் குறியீடு என ரசிகர்கள் கொண்டாட்டம்." என விமர்சகரும் இயக்குநருமான ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்க்ரீன் ஷாட் உடன் ஷேர் செய்ய விஜய் ரசிகர்கள் வழக்கம் போல அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

மாஸ்டர் படத்திலும்

மாஸ்டர் படத்திலும்

மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் வெளியான போது, லிரிக் வீடியோவில் காவியை விஜய் எதிர்ப்பது போல காட்டியிருப்பார்கள். அப்போதும், அது பெரிய சர்ச்சையானது. பீஸ்ட் படத்திலும் விஜய் காவியை கிழிக்கிறார் என புரமோஷனுக்காக வழியை தேட ஆரம்பித்து விட்டனர். இந்த படத்திற்கும் எதிர்ப்பு வந்தால், ஃப்ரீ புரமோஷன் தானே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X