அய்யோ கடவுளே.. பிரபல நடிகையின் தந்தை திடீர் மரணம்.. ஆறுதல் கூறிய ரசிகர்கள்!
சென்னை: சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் தந்தை ராஜ்குமார் உடல்நலக்குறைவால் காலமானார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரச்சிதா மகாலட்சுமி.

மேலும் அந்த தொடரே அவருக்கு பெரிய ரீச் கொடுக்க அதன்பிறகு 2013ம் ஆண்டு சரவணன் மீனாட்சி 2 சீரியலில் நடித்திருந்தார். அந்த சீரியல் மூலம் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்றார்.
பிடித்தமான நடிகை: பெங்களுரைத் சேர்ந்த நடிகை ரச்சிதா பார்ப்பதற்கு மாநிறமாக இருந்தாலும் இவரது அழகாலும் திறமையான நடிப்பாலும் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். கன்னடம், தெலுங்கு சீரியலில் நடித்து அனைவருக்கும் பரீச்சியம் ஆனார். நடிகை ரச்சிதா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பிக் பாஸ் வீட்டில்: இவர்களது திருமணம் பெற்றோர்களின் சம்மதத்துடன் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் ஜீ தொலைக்காட்சியில் நாச்சியார் என்ற சீரியலில் இருவரும் இணைந்து நடித்தனர். ஆனால், அந்த சீரியல் கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. அதையடுத்து பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி வரை வீட்டில் இருந்தார்.
கணவரை பிரிந்தார்: இதையடுத்து, மாங்காடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கணவர் தினேஷ் செல்போனுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்புகிறார். மேலும், போன் செய்து மிரட்டுகிறார் என்று புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் மாங்காடு அனைத்து மகளிர் போலீசார் தினேஷை விசாரணைக்கு அழைத்தனர்.

தந்தை உயிரிழந்தார்: கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் ரச்சித்த பெற்றோருடன் வசித்து வரும் நிலையில், அவரது தந்தை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். கடந்த சில மாதங்களாக பெங்களூருவில் தங்கி உடல்நிலை சரியில்லாமல் இருந்த தந்தையை கவனித்து வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். அவரின் இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது. தந்தையை இழந்த ரச்சித்தாவிற்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











