விவாகரத்துக்கு காரணம் இதுதானா? திருமணம் குறித்து திவ்யதர்ஷினி என்ன சொன்னார் தெரியுமா?
சென்னை: தொகுப்பாளினி டிடி என்ற திவ்யதர்ஷினியை தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அந்த அளவிற்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலும் சரி.. சினிமா பிரபலங்களை பேட்டி எடுப்பதிலும் செம கில்லாடி..
தொகுப்பாளர்கள் எத்தனை பேர் புதுசு புதுசாக வந்தாலும் மக்கள் மனதில் இவருக்கு என்று தனி இடம் உண்டு.

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் அன்றும் இன்றும் என்றும் ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி தான். தன்னுடைய திறனாலும் சுட்டித்தனத்தாலும் அனைவரையும் கட்டி இழுத்து உள்ளார்.
டிடி திவ்யதர்ஷினி: காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த, திவ்யதர்ஷினி, 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை அடுத்து அவரால் நீண்ட நேரம் நிற்கமுடியாததால், அவர் முக்கியமான நிகழ்ச்சியை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.

திருமணம் என்பது சாதனை கிடையாது: திருமணம் குறித்து பேசி உள்ள திவ்யதர்ஷினி, பத்து வருடங்களுக்கு முன்பு எங்களுக்கு திருமணம் நடந்தது. அப்போது திருமணம் பற்றிய என்னுடைய எதிர்பார்ப்பு மற்றும் புரிதல் வேறு மாதிரி இருந்தது. ஆனால், தற்பொழுது அது மொத்தமாக மாறிவிட்டது. திருமணம் செய்து கொள்வது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். திருமணத்தால், தான் வாழ்க்கை ழுழுமை அடையும் என்கிறார்கள். ஆனால், அதனை நான் நம்ப மாட்டேன். திருமணம் என்பது ஒரு சாதனை கிடையாது. திருமணம் செய்து ஆக வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.
யாருக்கு யாரை பிடிக்கிறதோ: மேலும், யாருக்கு யாரை பிடிக்கிறதோ? யார் வாழ்க்கைக்கு யார் சரியாக இருப்பார் என்று நினைக்கிறார்களோ அவர்களை திருமணம் செய்து கொள்கிறார்கள். என்னுடைய விதி யாரையும் பாதிக்காது. என்னை பற்றி சோசியல் மீடியாவில் எழுதக்கூடிய விஷயங்கள் குறித்து நான் கவலைப்படுவதும் கிடையாது என்று திவ்யதர்ஷினி பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











