5 வருட கனவு நனவாகிடுச்சு… விஜய் டிவி பாலா செய்த தரமான சம்பவம்.. குவியும் வாழ்த்து!

சென்னை: விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா தனது பிறந்த நாளுக்கு தரமான சம்பவத்தை செய்து இருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் சீரியல், கேம் ஷோ, ரியாலிட்டி ஷோ என எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அது விரைவில் மிகப்பெரிய உச்சத்தை அடைந்து விடும்.

இதனால், விஜய் டிவில் தலைகாட்டினாலும் போதும் வாழ்க்கை வேறமாதிரி ஆகிவிடும் என பலரும் விஜய் டிவியில் எப்படியாவது நுழைந்துவிட தவம் கிடக்கிறார்கள்.

Vijay television bala gifted ambulance to old age home on his birthday

விஜய் டிவி பாலா: அப்படி விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நுழைந்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் தான் பாலா. இவரின் வித்தியாசமான பேச்சு, நரம்பு போல இருக்கும் இவரின் உடல்வாகும், அந்த உடலை வைத்துக்கொண்டு இவர் செய்யும் சேட்டைகள் ரசிக்கும்படி இருக்கும். இதனால், ரசிகர்களின் மனதில் வெகுவிரைவில் ஒட்டிக்கொண்டார்.

குக் வித் கோமாளி: இதையடுத்து, குக் வித் கோமாளியில் சிவாங்கி, மணிமேகலை,குரேஷி என அனைவரிடமும் கூட்டு சேர்ந்து டைமிங் ஜோக் அடித்து பட்டையை கிளப்பினார். இந்த நிகழ்ச்சியில் ரித்திகாவை காதலிப்பதாக சொல்லிக்கொண்டு அவரின் பின்னே சுற்றிக்கொண்டு லூட்டி அடித்தார். நகைச்சுவையில் கலக்கி வந்த பாலா தற்போது இசைவெளியீட்டுவிழா நிகழ்ச்சி, பட நிகழ்ச்சி என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

Vijay television bala gifted ambulance to old age home on his birthday

சிறந்த காமெடியன் அவார்டு: தற்போது சின்னத்திரையில் அதிக அளவில் பிரபலமாகி வருகிறார். அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் விஜய் டிவியில் நடந்த விருது வழங்கும் நிகழ்வில் கூட இவருக்கு சிறந்த காமெடியன் என்ற அவார்டு கொடுக்கப்பட்டது. மேலும் பாலா இந்த இடத்திற்கு வருவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டார் என்றும் அந்த நிகழ்வில் காட்டப்பட்டது.

5 வருட கனவு நனவாகிடுச்சு: அண்மையில் தனது பிறந்த நாளை கொண்டாடிய பாலா முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்சை பரிசாக அளித்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பாலா, 5 வருட கனவு நனவாகிடுச்சு. எப்படியாவது ஹோம்ல இருக்கிற பெரியவங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுக்கனும்னு நினைச்சேன் என் கிட்ட காசு இல்ல. ரொம்ப நாளா காசு சேர்த்து எப்படியோ என்னுடைய சொந்த காசுல ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துட்டேன். இதுக்கப்புறம் பெரியவங்க செக்-அப்புக்கு ஆட்டோல போக வேண்டாம், ஆம்புலன்ஸ்லயே போகலாம் என நெகிழ்ச்சி உடன் பதிவிட்டுள்ளார். பாலா செய்துள்ள இந்த உதவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X