Bigg boss Season7: பிக் பாஸ் சீசன் 7.. ரெண்டு வீடு.. 20 போட்டியாளர்கள்.. நாளை கிராண்ட் ஓபனிங்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளை மாலை 6 மணி முதல் தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

மக்களுக்கு பிடித்த தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

Vijay Television Bigg boss Tamil Season 7 Grand Launch tomorrow 6pm

இந்த நிகழ்ச்சி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட மொழிகளிலும் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

பிக்பாஸ்: இந்தி பிக் பாஸ் இதுவரை 16 சீசன்களை கடந்த தற்போது 17வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை சல்மான் தொகுத்து வழங்கி வருகிறார். அதே போல 2017ஆம் ஆண்டு தொடங்கி பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் ஆறு சீசன்களையும் உலக நாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார்.

Vijay Television Bigg boss Tamil Season 7 Grand Launch tomorrow 6pm

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில்: கடந்த சீசன் முதலில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை இந்த முறையும் 24 மணி நேரமும் ஹாட் ஸ்டாரில் பார்க்கலாம். ஆறாவது சீசனில் விக்ரமன் வெற்றிப் பெறுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ஆசீம் வெற்றி பெற்றதால், கொந்தளித்த நெட்டிசன்கள் விஜய் டிவியை வெச்சு செய்துவிட்டனர்.

ரெண்டில் ஒன்னு பார்க்கலாமா: இருந்த போதும், பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி குறித்து அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியானது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சில மாற்றங்களை செய்துள்ளனர். அதாவது ரெண்டு வீடு, 20 போட்டியாளர்கள் என கமல் அறிவித்துள்ளார்.

Vijay Television Bigg boss Tamil Season 7 Grand Launch tomorrow 6pm

போட்டியாளர்கள் யார்: பிக் பாஸ் சீசன் 7ல் விஜய் டிவி தொகுப்பாளர் மா.கா.பா ஆனந்த், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், பிரபல நடிகர் பப்ளு எனும் பிருத்விராஜ், பாரதி கண்ணம்மா ரோஷினி, குக்கு வித் கோமாளி புகழ் ரவீனா தாஹா, தர்ஷா குப்தா, ரச்சித்தாவின் கணவர் தினேஷ் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

கிராண்ட் ஓபனிங்: இந்நிலையில், விஜய் டிவி புது ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.அதில் நாயகன் மீண்டும் வர.. எட்டுத்திக்கும் பயம்தானே என்று பாடல் ஒலிக்க கமல் மாஸாக நடந்து வருகிறார். நாளை 6 மணி முதல் பிக்பாஸ் கிராண்ட் ஓபனிங் தொடங்க உள்ளது. தமிழில் பல சீசன்களை தொகுத்து வழங்கிய தனக்கே உரித்தான ஸ்டைலில் மூத்த நட்சத்திரமான கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார். அடுத்த 3 மாதத்திற்கு எண்டர்டெய்மெண்ட்டுக்கு குறைவே இருக்காது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X