Bigg Boss Tamil Season 7: சத்தமே இல்லாமல் சம்பவத்தை செய்த கமல்.. பிக் பாஸ் சீசன் 7 விரைவில்!

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் முக்கிய அப்டேட்டை விஜய் டிவி சற்று முன் வெளியிட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில், டைட்டில் வின்னராக அசீம் தேர்வு செய்யப்பட்டார். இரண்டாம் இடத்தை விக்ரமன் பெற்றார்.

Vijay television bigg boss tamil season 7 promo

டைட்டில் வின்னராக விக்ரமன் வருவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அசீம் டைட்டிலை பெற்றது இணையத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி பெரும் விவாதத்திற்கு உள்ளானது.

பிக் பாஸ் 7: பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாகும், இதில், திரைப்பிரபலங்கள் முதல் சோஷியல் மீடியாவில் பிரபலமாக இருப்பவர்கள் வரை அனைவரும் கலந்து கொள்ளும் இந்த நிலையில், காதல்,நட்பு,சண்டை, அழுகை, விவாதம் என அனைத்தும் இருப்பதால், இந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சியாக உள்ளது.

Vijay television bigg boss tamil season 7 promo

போட்டியாளர்கள்: பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக ஆட்கள் தேர்வு ஒருபக்கம் படு ஜோராக நடைபெற்று வருகிறது. இதில், ரேகா நாயர், ம கா பா ஆனந்த், விஜே பாவனா, பயில்வான் ரங்கநாதன் ஆகியோரின் பெயர்கள் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. தனது தனித்துவமான குரலால் மிகவும் பிரபலமான பாலிமர் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், இதுகுறித்த உறுதியான எந்த தகவலையும் விஜய் டிவி இதுவரை வெளியிடவில்லை.

பிக் பாஸ் விரைவில்: இந்நிலையில், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் அப்டேட் இன்று இரவு 7 மணி 7 நிமிடத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சரியான நேரத்தில், கமலின் ப்ரோமோ வெளியானது, கடந்த சீசனில் ஆரம்பிக்கலாமா என அலப்பறை கொடுத்த கமல்ஹாசன், நிசப்தமான கடலின் நடுவே நின்று கொண்டு பிக்பாஸ் சீசன் விரைவில் என அப்டேட்டை கொடுத்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கி ஜனவரி மாதம் வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X