Yashika anand home tour: வீடா இல்ல அரண்மனையா? வீட்டுக்குள்ளே குட்டி பார் வைத்துக்கும் யாஷிகா ஆனந்த்!
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்தின் வீட்டைப் பார்த்த ரசிகர்கள் இது வீடா இல்ல அரண்மனையா என கேட்கும் அளவிற்கு வீடு மிகவும் பிரம்மாண்டமாக உள்ளது.
தமிழ் திரையுலகின் கிளாமர் நடிகைகளில் ஒருவர் யாஷிகா ஆனந்த். இவர் துருவங்கள் 16, நோட்டா உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இணையத்தில் ஆக்டிவ்: நடிகை யாஷிகா தற்போது தற்போது இவன் தான் உத்தமன், ராஜ பீமா, பாம்பாட்டம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் விதவிதமான உடையில் கவர்ச்சியான போட்டோ மற்றும் வீடியோவை பதிவிட்டு வருகிறார்.
வீடா இல்ல அரண்மனையா: தற்போது இவர் தனது வீட்டை சுற்றிகாட்டி உள்ளார். வீட்டை பார்ப்பதற்கு மிகவும் பிரம்மாண்டமாக உள்ளது. ஆங்காங்கே புத்தர் சிலை, விநாயர் சிலை, கண்ணாடி வேலைபாடுகள்,வண்ண வண்ண விளக்குகள் என இது வீடா இல்ல அரண்மனையா என வாய் பிளக்கும் அளவிற்கு உள்ளது. மேலும், ஈஷா யோகா மையத்திற்கு என்னால் செல்ல முடியாமல் போனதால்,ஈஷா சிலையை வீட்டிலேயே வைத்த இருக்கிறார். அந்த சிலையை பார்ப்பதற்கு மிகவும் பிரம்மாண்டமாக இருக்கிறது.
வீட்டில் குட்டி பார்: மேலும் 2019ம் ஆண்டு இந்த வீட்டை நான் வாங்கிவிட்டேன். ஆனால், கொரோனா வந்ததால், இந்த வீட்டிற்கு வருவது தாமதமாகிவிட்டது என்று வீட்டின் அடுத்த அறை சுற்றிக்காட்டினார். அதில், நாங்கள் பஞ்சாபி குடும்பத்தில் எப்போதுமே நல்ல டிரஸ் பண்ணணும், நல்லா சாப்பிடனும்,நல்லா குடிக்கணும் என்பதால், எங்கள் வீட்டில் குட்டி பார் இருக்கு, எங்கள் வீட்டில் யாரும் குடிக்கமாட்டாங்க. ஆனால், சொந்தக்காரங்க யாராவது வந்தார்கள் என்றால் அவர்களுக்காக இந்த பார் என்று விதவிதமான சரக்கு பாட்டில்களை காட்டினார்.


Click it and Unblock the Notifications











