சாப்பாட்டுக்கே வழியில்ல.. பெத்த பிள்ளை கைவிட்டுட்டான்.. கதறி அழுத நடிகை.. ஓடி வந்து உதவிய பாலா!
சென்னை: நகைச்சுவை நடிகையான பிந்துகோஷ் 100க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார். சொந்த வீடு, வாசல் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர், தனது மகன்களுக்காக அனைத்தையும் விற்றுவிட்டு தற்போது சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறார். இந்த விஷயம் தெரிந்த கேபிஒய் பாலா ஓடி வந்து உதவி செய்துள்ளார்.
76 வயதை கடந்த நடிகை பிந்துகோஷ், அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றில் பேசி இருந்தார். அதில், பிபி, சுகர் எல்லாமே இருக்கு, நடக்கவே முடியவில்லை, ஹாஸ்பிட்டல் போனா 40 ஆயிரம், 50ஆயிரம் கேக்குறாங்க. நான் வாழ்றதுக்கே கஷ்டப்பட்டு இருக்கும்போது என்னால் அவ்வளவு பணத்தை எப்படி கொடுக்க முடியும். இதுவரைக்கும் 3 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து விட்டேன். ஆனால், எதுவும் சரியாகவே இல்லை.

நடிகை பிந்து கோஷ்: சினிமால நல்ல சம்பாதித்து சொந்த வீடு எல்லாமே இருந்தது ஆனா, அது எல்லாத்தையுமே பசங்களுக்காக விற்றுவிட்டேன். எனக்குன்னு நான் எதையுமே சேர்த்து வச்சுக்கவே இல்ல, புள்ளைங்க புள்ளைங்கன்னு எல்லாத்தையும் என்னுடைய பசங்களுக்காக கொடுத்தேன். ஆனால், என்னுடைய உடல்நிலை முடியாமல் போனதால், வீட்டில் ஒரு சண்டை வந்தது அதன் பிறகு அனைவரும் என்னை விட்டு போய்விட்டார்கள். அதன் பிறகு வீட்டை விற்றுவிட்டேன். இப்போ என்கிட்ட எதுவுமே இல்ல ஒரு அனாதை மாதிரி தான் இந்த வாழ்க்கையை நான் வாழ்ந்துகிட்டு இருக்கேன் என்று பேட்டி அளித்திருந்தார்.
கண்ணீர் விட்ட நடிகை: இந்த பேட்டி இணையத்தில் வைரலானதை அடுத்து நடிகை ஷகிலா அவர் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது, என் மூத்த மகன் என்னைவிட்டு விட்டு சென்றுவிட்டான். நான் போன் பண்ணக்கூடா பணத்திற்காகத்தான் காசு கேட்பேன் என்று நினைத்து எடுப்பதே இல்லை. என் இரண்டாவது மகன் கிடைத்த வேலையை செய்து வருகிறான். அவனால் என் மருத்துவ செலவை பார்க்க முடியவில்லை என்று கண்ணீர் மல்க பேசி இருந்தார். அவர் பேசுவதை கேட்டு ஷகிலாவும் கண்ணீர் விட்டு அழுதார். இதைத்தொடர்ந்து, ஒரு காலகட்டத்தில் பிந்து கோஷ் மிகவும் புகழ் பெற்ற நடிகை, இவர்களை இந்த நிலைமையில் பார்ப்பதற்கே முடியவில்லை. சாப்பாட்டுக்கே கஷ்டப்டுகிறார்கள் இவர்களுக்கு யாராவது உங்களால் முடிந்ததை கொடுத்து உதவுங்கள் என கூறியிருந்தார்.
ஓடி வந்து உதவிய பாலா: இந்த நிலையில், இந்த வீடியோவை பார்த்த KPY பாலா தானாக முன் வந்து உதவி செய்துள்ளார். பிந்து கோஷுக்கு ரூ. 80 ஆயிரம் கொடுத்து உதவியுள்ளார். நானும் உங்க பையன் மாதிரி தான் உங்களுக்கு என்ன மருத்துவ உதவி வேண்டும் என்றாலும் என்னிடம் கேளுங்கள் என்றார். இந்த வீடியோ நடிகை ஷகிலா இணையத்தில் வெளியிட்டு, "ஒருத்தருக்கு உடம்பு சரியில்ல-னு நேத்து தான் பாலா கிட்ட பேசிட்டு கூப்பிட்டேன். என் குழந்தை இன்னிக்கி வந்து நிக்கிறான். 80 ஆயிரம் ரூபாய் அவங்க கைல கொடுத்துவிட்டு போய்ட்டான். இதுக்குமேலே என்ன மருத்துவ செலவு வந்தாலும் என்ன கூப்புடுங்கனு சொல்லிட்டு போய்ட்டான் என கூறியுள்ளார்.
விஜய் டிவியில் கலக்கப்போவது யார் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா, தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.பழம்பெரும் நடிகை ஒருவருக்கு திரைத்துறையினர் பலரும் உதவி செய்யாத நிலையில் பாலா தானாக முன் வந்து உதவி செய்துள்ளர்.


Click it and Unblock the Notifications











