டிடி எஃப் வாசன் அப்பாவி பையன்.. காதலை கன்பார்ம் செய்த ஷாலின் ஜோயா!
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி ஷாலின் ஜோயாவும் ஒரு குக்காக இருக்கிறார். டிடிஎஃப் வாசனும், ஷாலின் ஜோயாவும் காதலித்து வருவதாக செய்திகள் பரவிவரும் நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் ஜோயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிடிஎஃப் வாசனை புகழ்ந்து உருகி உருகி பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எந்த அளவிற்கு மக்களிடம் வரவேற்பு இருக்குமோ அதே அளவிற்கு, குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ரசித்து பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் இருப்பதால், நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் செஃப் தாமு, பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக உள்ளனர். இதில் குக்காக உள்ளார் ஷாலின் ஜோயா, அவர் செய்வதை எல்லாம் பார்க்கும் போது உண்மையில் இவருக்கு சமைக்க தெரியுமா என்கின்ற சந்தேகம் வருகிறது. இருந்தாலும் இவரின் மலையாளம் கலந்த அழகான க்யூட் தமிழை கேட்பதற்காகவே தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஜோயா இன்ஸ்டா போஸ்ட்: தற்போது ஜோயா தனது இன்ஸ்டாகிராமில் டிடிஎஃப் வாசனுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து ஒரு பதிவினை போட்டுள்ளார். அதில், நான் சந்தித்த மிகச் சிறந்த மனிதர் அவர். அவர் யாரையும் காயப்படுத்தவில்லை, அவர் யாரையும் காயப்படுத்த மாட்டார் என்று எனக்கு தெரியும். இந்த இளம் வயதில், வெளி உலகத்தில் யாருக்கும் தெரியாமல் பல உதவிகளை அவர் செய்து வருகிறார். எனக்கு சில நாட்களாகத்தான் அவரைத் தெரியும். அவர் மிகவும் கனிவானவர், அப்பாவி பையன்.

அப்பாவி பையன்: அனைவரும் அவரிடம் அன்பாக இருங்கள், அவருக்கு எந்த கெட்ட எண்ணமும் இல்லை. அவரைப் போன்ற மனிதர்கள் ரொம்ப அபூர்வம். மிகவும் விலைமதிப்பற்றவர். இவரைப் போன்றவர்களை என்ன ஆனாலும் கைவிடக் கூடாது. அன்புள்ள வாசா, நீ உண்மையிலேயே ஒரு ஜெம் என்றும் பதிவிட்டுள்ளார். டிடிஎஃப் வாசனும் ஷாலின் ஜோயாவும் காதலிப்பதாக இதுவரை வெளிப்படையாக சொல்லாத நிலையில், ஜோயாவின் இந்த பதிவு இவர்களின் காதலை உறுதிப்படுத்தி உள்ளது.

ஐபிஎல்: டிடிஎஃப் வாசன் ஏற்கனவே செல் அம் இயக்கத்தில் உருவாகி வரும் மஞ்சள் வீரன் படத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது ஐபிஎல் என்ற படத்தில் நடித்து வருகிறார். ராதா ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் கருணாகரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு விநாயகமூர்த்தி இசையமைக்க உள்ளார். பான் இந்தியன் படமாக உருவாக உள்ள இந்த படத்தின் இரண்டாவது போஸ்டர் நேற்று வெளியானது. அந்த போஸ்டரில் டிடிஎப் வாசன் முரட்டுத்தனமான லுக்குடன் இருக்கிறார். இப்படம் கார் ரேஸ் தொடர்பான படமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications











