அடக்கடவுளே.. காலில் கட்டு.. குக்வித் கோமாளி மணிமேகலைக்கு என்னாச்சு.. பதறிய ரசிகர்கள்!

சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான மணிமேகலை காலில் பெரிய கட்டுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளார்.

சன் மியூசிக் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக புகழ் பெற்றவர் விஜே மணிமேகலை. மியூசிக் சேனலில் பாட்டு கேட்பதற்காக போன் செய்வதை விட இவரிடம் பேசுவதற்காகவே பலர் போன் செய்வார்கள்.

தனது இனிமையான பேச்சாலும், வெகுளித்தனமான நகைச்சுவை உணர்வாலும் ரசிகர்களை கவர்ந்தவர்.

Vijay television fame anchor manimegalai met accident and got leg injury

மனம் கவர்ந்த மணிமேகலை: தொகுப்பாளினி மணிமேகலை, சன் மியூசிக் மட்டுமல்லாமல், சன் டிவி, சன் நியூஸ் என அனைத்து தொலைக்காட்சிகளிலும் நட்சத்திர தொகுப்பாளியான வலம் வந்தார். சிரிக்க சிரிக்க பேசுவது, யாரையும் புண்படுத்தாத நகைச்சுவை உணர்வே இவரை வெற்றித் தொகுப்பாளினியாக உயர்த்தி உள்ளது.

காதல் திருமணம்: இவர் சன் தொலைக்காட்சியில் பணிபுரிந்த போது நடன இயக்குனர் ஹூசன் என்பதை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஹூசனை திருமணம் செய்து கொள்ள மணிமேகலை வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தால், வீட்டை விட்டு வெளியேறி, நண்பர்கள் முன்னிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

விஜய் டிவியில்: இந்த ஜோடி விஜய் டிவியில் ஒளிபரப்பரன மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் கேம் ஷோ தொடங்கி அனைத்திலும் இவர்களின் ஒற்றுமை, செல்ல சண்டைகள் பார்ப்பவர்களை வியக்க வைத்துள்ளது. துருதுரு பெண்ணாக நாம் பார்த்து வந்த மணிமேகலை இப்போது குடும்ப பெண்ணாக மாறி குடும்பத்தை பொறுப்புடன் வழி நடத்தி வருகிறார்.

விலகினார்: விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான்கு சீசன்களாக கோமாளியாக வந்த ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் பாதியில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அதற்கு இணையத்தில் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், உண்மையான காரணம் என்ன என்று தெரியவில்லை

அடக்கடவுளே: இந்நிலையில், மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காலில் மிகப்பெரிய கட்டுடன் சோகமாக இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். மேலும் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் தன்னுடைய காலில் பலத்த அடி பட்டுவிட்டது. தன்னால் எழ கூட முடியவில்லை என்றும், மனசோர்வுடன் உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த பதிவைப்பார்த்து பதறிப்போன ரசிகர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X