மணிப்பூர் விவகாரம்… நீ சோத்த தான் தின்றியா? கொந்தளித்த அறந்தாங்கி நிஷா!

சென்னை: மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி சாலையில் நடக்க வைத்த விவகாரம் நாட்டையை உலுக்கி வரும் நிலையில், அறந்தாங்கி நிஷா கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் பெரும்பான்மையாக வசிக்கும் மெய்தி சமூகத்தினர் பழங்குடி அந்தஸ்து தர வலியுறுத்தினர். இதை எதிர்ந்து கூகி மற்றும் நாகா பழங்குடியின மக்கள் மே 3ந் தேதி மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதைத் தொடர்ந்து கூகி பழங்குடியின மக்களுக்கு எதிராக பயங்கர வன்முறை வெடித்தது. மெய்தி சமூகத்தினர் கூகி பழங்குடியினர் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தினர்.

Vijay television fame Aranthangi Nisha Burst Out about manipur issue

வீடுகளை இழந்தனர்: கூகி பழங்குடியினத்தவரின் வீடுகள், கடைகள் அனைத்து சூறையாடப்பட்டன. இந்த கலவரத்தில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து வீதிக்கு வந்ததால், அவர்கள் அனைவரும் பாதுகாப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதால், பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

நாட்டையே உலுக்கிய வீடியோ: கடந்த மூன்று மாதமாக அந்த பகுதியில் பதற்றம் நிலவி வரும் நிலையில், நாட்டையே உலுக்கும் வகையில், மெய்தி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் கூகி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்று, அவர்களை வயல் வெளியில் வைத்து கூட்டு பலாத்காரமும் செய்துள்ள வீடியோ இணையத்தில் வெளியானது. நாடு முழுவதும் இந்த வீடியோவுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

v

இத்தனை நாட்கள் தாமதம்: இந்த மனித தன்மையற்ற செயலுக்கு அறந்தாங்கி நிஷா கொந்தளித்து பேட்டி அளித்துள்ளார். அதில், மே மாதம் நடந்த கொடூரமே கிட்டத்தட்ட 77நாட்களுக்கு பிறகு இப்போத்தான் தெரிய வந்துள்ளது. ட்விட்டர்,பேஸ் புக், வாட்ஸ் அப் என அனைத்து தொழில்நுட்பம் இருந்து இந்த சம்பவம் இப்போத்தான் தெரியவந்துள்ளது என்றால், இன்னும் சொல்லமுடியாத பல விஷயம் அங்கு நடந்து இருக்கிறது.

நீ சோத்த தான் தின்றியா: இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றதைப்பார்த்து என்னால் ஜீரணிக்கவே முடியல. ஒரு பெண்ணை நிர்வாணமாக அழைத்து வரும் அளவுக்கு உனக்கு சாதி வெறி இருக்கிறதா, நீங்க பசிக்கும் போது அதுல தான்டா பால் குடிச்சிங்க, ஒரு தாயின் அந்த இடத்தில் தானே நீ பிறந்தே, நீ எல்லாம் என்ன ஜென்மம். பெண் என்றால் அவளை ஆடைகளை கழட்டி நிர்வாணமாக்குவியா? நீ சோத்த தான் தின்றியா என்று அறந்தாங்கி நிஷா தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X