மகள் உயிருக்காக உதவி கேட்ட தாய்.. ஓடி வந்து ரூ.1 லட்சம் கொடுத்த பாலா.. இந்த மனசுதான் சார் கடவுள்!

சென்னை: விஜய் டிவி நிகழ்ச்சிகளின் மூலம் பேமஸ் ஆன பாலா, மகளுக்காக உதவி கேட்ட தாய்க்கு ஓடி போய் உதவி செய்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் பாலா.

ரைமிங் காமெடியால் ரசிகர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்த இவருக்கு அடுத்தடுத்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

vijay television fame kpy bala help a family for girl treatment

விஜய் டிவி பாலா: குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் தொகுப்பாளராகவும் அவதாரம் எடுத்த பாலா, பல்வேறு இசை வெளியீட்டு விழாக்களை தொகுத்து வழங்கி அதன்மூலம் சம்பாதித்து வருகிறார். அதுமட்டுமின்றி சினிமாவிலும் பாலாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இப்படி பிசியாக இருக்கும் பாலா, தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பாலானவற்றை ஆதரவற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க பயன்படுத்தி வருகிறார்.

பாவா லட்சமணனுக்கு உதவினார்: கடந்த சில மாதங்களுக்கு முன் KPY பாலா, மருத்துவமனையில் சிகிச்சை வந்த பாவா லட்சமணனை நேரில் சந்தித்து ரூ.30 ஆயிரம் பணத்தை கொடுத்து உதவினார்.சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பாவா லட்சுமணனிடம் சிறிது நேரம் மனம் விட்டு பேசி, என்னால் முடிந்த உதவியை செய்தேன் என்றார்.

முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ்: இதையடுத்து,தன்னுடைய சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்து உதவினார். முதலில் அறந்தாங்கி அருகே முதியோர் இல்லம் ஒன்றிற்கு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி கொடுத்த பாலா, அதையடுத்து மலை கிராமம் ஒன்றிற்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்தார்.

vijay television fame kpy bala help a family for girl treatment

உதவி கேட்ட தாய்: இந்நிலையில், பாலா தனது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில், ஒரு அம்மா தன்னுடைய மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவரை பற்றி உங்களுடைய இன்ஸ்டாகிராமில் வீடியோ போடுங்கள், எங்களுக்கு மருத்துவ உதவிக்கு கிடைக்கும் என கூறினார். மகள் குறித்த சில வீடியோக்களையும் எனக்கு அனுப்பி வைத்தார்.

என்னால் முடிந்த உதவி:இந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் பகிர, எனக்கு மனசு வராததால், அவர்களின் வீட்டிற்கே வந்து தன்னால் முடிந்த ஒரு லட்சம் தொகையை அவர்களிடம் கொடுத்துள்ளேன். மேலும், அந்த பெண்ணின் பிஸியோ தெரபி சிகிச்சைக்கு ஆகும் செலவையும் தானே ஏற்று கொள்கிறேன் என கூறியுள்ளார். இந்த வீடியோவை பாலா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X