எனக்கு இப்படிப்பட்ட பெண் தான் வேணும்.. KPY பாலா கண்டிஷன் என்ன தெரியுமா?

சென்னை: இலவச ஆம்புலன்ஸ், புயல் நிவாரணம் உதவி, இலவச சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் உதவி கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் தன்னால் முடிந்த உதவி செய்து வருகிறார் KPY பாலா. பலரை சிரிப்பால் மகிழ்வித்து வந்த பாலா, மனமுவந்து செய்யும் உதவியால், பலரை மகிழ்வித்து வருகிறார். தற்போது இவர், தனது வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என கண்டிஷன் போட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு கலகலப்பாக பேசி ரசிகர்களின் மனதில் மனம் இடம் பிடித்தவர் பாலா. இவரின் வித்தியாசமான பேச்சு, நரம்பு போல இருக்கும் இவரின் உடல்வாகும், அந்த உடலை வைத்துக்கொண்டு இவர் செய்யும் சேட்டைகள் ரசிக்கும்படி இருக்கும். இதனால், ரசிகர்களின் மனதில் வெகுவிரைவில் ஒட்டிக்கொண்டார். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, குக் வித் கோமாளியில் சிவாங்கி, மணிமேகலை,குரோஷி என அனைவரிடமும் கூட்டு சேர்ந்து டைமிங் ஜோக் அடித்து பட்டையை கிளப்பினார். நகைச்சுவையில் கலக்கி வந்த பாலா தற்போது இசைவெளியீட்டுவிழா நிகழ்ச்சி, பட நிகழ்ச்சி என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

Vijay Television famous comedy kpy bala interview about about future wife

KPY பாலா: டிவியில் இவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, புலிக்குட்டி பாண்டி, யோகி பாபு நடித்த Shoe, பாண்டி, விமர்சகரான ப்ளூ சட்டை மாறனின் ஆண்டி இந்தியன், நாய் சேகர் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு இவரை பிரகாசிக்க வைத்தது. பாலா நடிகர் மட்டுமில்லாமல் சமூக அக்கறை கொண்டவராகவும் இருக்கிறார். இவர் தான் சம்பாதித்த பணத்தின் மூலம் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

தேடி தேடி உதவி: ஆம்புலன்ஸ் இல்லாத பல கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்தார். அதே போல ஆதரவற்ற சிறியவர்களை படிக்க வைப்பது மட்டும்மால், ஆதரவற்ற பெரியோர்களின் மருத்துவ செலவிற்கும் தன்னால் ஆன உதவிகளை செய்து வருகிறார். ஓடி ஓடி பலருக்கு இவர் செய்த உதவி இவரை வான் அளவிற்கு உயர்த்திவிட்டது என்று சொல்லலாம். பெரிய நடிகர்களே உதவி செய்ய தயங்கும் போது, குறைந்த சம்பளம் வாங்கும் இவர் ஏழை எளிய மக்களுக்கு தேடி தேடி உதவி செய்து வருகிறார்.

லாரன்சுடன் இணைந்தார்: அண்மையில் இவர், கழிப்பறை இன்றி தவித்த மாணவர்களுக்காக 15 லட்சம் ரூபாய் செலவில், நடிகர் ராகவா லாரன்சுடன் இணைந்து கழிப்பறை கட்டிக்கொடுத்தார். தற்போது இருவரும் சேர்ந்து பல உதவிகளை செய்து வரும் நிலையில், பாலாவை ஹீரோவாக்க உள்ளதாகவும், இயக்குனர்கள் கதை இருந்தால் தன்னிடம் எடுத்து வாருங்கள் என்றும், இவர் இது போன்றவர்கள் ஹீரோவானதால் இன்னும் பல உதவி செய்ய முடியும் என்று லாரன்ஸ் தனியார் தொலைக்காட்சி நிகிழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தார்.

வருங்கால மனைவி: இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த பாலாவிடம் உங்களின் வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் எனறு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த பாலா, எனக்கு மனைவியாக வர போகும் பெண் எனக்கு காலையிலிருந்து காபி டீ போட்டு தர வேண்டும் என்ற அவசியம் இல்லை. என்னை நம்பினால் போதும், அவர்களுக்கு தேவையானதை நான் செய்ய ஆரம்பித்து விடுவேன். அதே போல, எனக்கு டிரஸ்ட்டை கொடுத்தால், அவர்களுக்கு நான் ரெஸ்ட்டை கொடுப்பேன் என கலகலப்பாக பேசி இருக்கிறார் கே பி ஒய் பாலா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X