CWC 4: குக் வித் கோமாளி சீசன் 4 போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு? ஷிவாங்கிக்கு தான் கம்மியாம்!
சென்னை: Cook with comali 4 ( குக் வித் கோமாளி சீசன் 4 போட்டியாளர்களின் சம்பளம்) குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் டிவி என்றாலே கொஞ்சம் ஸ்பெஷல் தான் என்று சொல்லும் அளவுக்கு சீரியல்களும், விளையாட்டு நிகழ்ச்சிகளும் சற்று வித்தியாசமானதாகவே இருக்கும்.
வழக்கமாக அனைத்து தொலைக்காட்சிகளும் விதவிதமாக சமைக்க வைத்து அதில் திறமையானவர்களை தேர்ந்து எடுத்த நிலையில், விஜய் தொலைக்காட்சி சற்று வித்தியாசமாக யோசித்து கோமாளிகளை வைத்து சமையல் நிகழ்ச்சியை நடத்தியது.

தொடர்ந்து மூன்று சீசன்கள்: குக் வித் கோமாளி முதல் சீசன் ஆரம்பிக்கும் போது சமையலுக்கும் கோமாளிக்கும் என்ன சம்மந்தம் என்று நினைத்தனர். ஆனால், கலகலப்பு குறையாமல் செம ஜாலியாக நிகழ்ச்சியை கொண்டு சென்றனர். முதல் சீனனுக்கு கிடைத்த வரவேற்பால் தொடர்ந்து மூன்று சீன்கள் வரை சென்றது.
பத்து போட்டியாளர்கள்: இதையடுத்து, குக் வித் கோமாளி சீசன் 4 கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. இதில், 10 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். கடந்த 3 சீசனில் கோமாளியாக இருந்த ஷிவாங்கி இந்த முறை குக்காக மாறினார். இவருடன் நடிகை சிருஷ்டி டாங்கே, நடிகை ஷெரின், நடிகை விசித்ரா, ராஜா ஐயப்பா, பாக்கியலட்சுமி சீரியல் தொடர் ஹீரோ விஜே விஷால், காளையன், மைம் கோபி, கிஷோர், ஆண்ட்ரியன் என பத்து போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

டைட்டில் வின்னர்: இதில், இறுதி போட்டியில் மைம் கோபி, விசித்ரா, கிரண், சிவாங்கி, ஸ்ருஷ்டி மற்றும் ஆண்ட்ரியன் ஆகியோர் தேர்வான நிலையில், மைம் கோபி டைட்டிலை தட்டிதூக்கினார். இரண்டாம் இடத்தை ஸ்ருஷ்டி மற்றும் மூன்றாவது இடத்தை விசித்ரா பெற்றுள்ளனர். அவர்களுக்கு இணையத்தில் ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சம்பள விவரம்: இந்த நிலையில் குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில், மைம் கோபிக்கு ரூ. 40 முதல் 50 ஆயிரம் வரை ஒரு எபிசோடுக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதில், விசித்ராவுக்கு ரூ. 30 ஆயிரமும், ஷெரினுக்கு ரூ. 35 ஆயிரமும், ஸ்ருஷ்டி டாங்கே மற்றும் ஆண்ட்ரியன் ரூ. 30 ஆயிரமும், விஜே விஷால் ரூ. 25 ஆயிரம், ராஜ் அய்யப்பா ரூ. 26 ஆயிரமும் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. இதில் ஷிவாங்கிக்கு 20 ஆயிரம் ரூபாய் என கம்மி சம்பளம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











