CWC 4 winner: ஜெயிச்சிட்டோம் தம்பிகளா..குக் வித் கோமாளி சீசன் 4 டைட்டிலை தட்டி தூக்கிய மைம் கோபி!

சென்னை: Cook with Comali season 4 Winner ( குக் வித் கோமாளி டைட்டில் வின்னர்) குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியின் டைட்டிலை மைம் கோபி தட்டி தூக்கி உள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் சீரியல், கேம் ஷோ, ரியாலிட்டி ஷோ என எத்தனையோ நிகழ்ச்சிகள் இருந்தாலும், ரசிகர்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சியாக இருக்கிறது குக்வித் கோமாளி நிகழ்ச்சியாகும்.

மூன்று சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், நான்காவது சீசன் ஜனவரி மாதம் தொடங்கி நேற்றோடு நிறைவடைந்துள்ளது.

Vijay television famous show Cook with Comali season 4 title winner is Mime Gopi

அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சி: குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் குக்குகளாக ஷெரின், ஸ்ருஷ்டி டாங்கே, விசித்ரா, நடிகர் ராஜ் ஐயப்பா, விஜே விஷால், ஜிகர்தண்டா நடிகர் காளையன், கிஷோர் ராஜ்குமார், ஆன்ட்ரின் நௌரிகட், மைம் கோபி ஆகியோர் இருந்தனர். மூன்று சீசன்களில் கோமாளியாக இருந்த சிவாங்கி, இந்த சீசனில் குக்காக மாறி சமையல் செய்து அசத்தினார்.

சர்ச்சை: இந்த சீசனில் கிஷோர் முதல் நபராக எலிமினேட் ஆகி வெளியேறினார். அவர் வெளியேறியதை அடுத்து, இணையத்தில், சிவாங்கிக்கு பதிலாக என்னை துரத்திட்டாங்க என்றும், சிவாங்கிக்கு சமைக்கவே தெரியவில்லை. ஆனால், அவருக்கு நடுவர்களின் சப்போர்ட் இருப்பதால் அவர் எமிலினேட் ஆகாமல் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன.

Vijay television famous show Cook with Comali season 4 title winner is Mime Gopi

மைம் கோபி வென்றார்: இந்நிலையில்,குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஃபினாலே நிகழ்ச்சி நேற்று 3 மணியில் இருந்து தொடர்ந்து 5 மணி நேரம் நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற விசித்ரா, ஸ்ருஷ்டி டாங்கே, ஆண்ட்ரியன், மைம் கோபி, கிரண் மற்றும் ஷிவாங்கி ஆகிய 6 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் மைம் கோபி டைட்டிலை தட்டிதூக்கினார். இரண்டாம் இடத்தை ஸ்ருஷ்டி மற்றும் மூன்றாவது இடத்தை விசித்திரா பெற்றுள்ளார்.

ஜெயிச்சிட்டோம் தம்பிகளா: டைட்டிலை வென்ற மைம் கோபிக்கு ஐந்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மைம் கோபிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயிச்சிட்டோம் தம்பிகளா... உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X