லவ் செட்டாகல.. வீட்ல பாத்த பொண்ணுக்கு ஓகே சொன்ன கவின்.. விரைவில் திருமணம்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் கவினுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற சீரியல்களில் நடித்த கவின் டீன் ஏஜ் பெண்களை கவர்ந்த நடிகராக இருந்தார்.
கவினின் க்யூடான நடிப்பை பார்த்து கிறங்கிப்போன இளசுகள் பலர் இவருக்காகவே சரவணன் மீனாட்சி பார்த்த கதை உண்டு.

நடிகர் கவின்: சீரியல் மூலம் பிரபலமான கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த வீட்டில் கவின், சாண்டி மாஸ்டர், முகேன், லாஸ்லியா என நான்கு பேரும் டீமாக செயல்பட்டு கானா பாட்டுப்பாடி, மொக்கை ஜோக் அடித்து அலப்பறை செய்தனர். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது லாஸ்லியாவுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார்.
லாஸ்லியாவுடன் காதல்: அதன்பின் கிடைத்த வரைக்கும் லாபம் என்று பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் லாஸ்லியாவும் கவினும் சந்தித்துக்கொள்ளவே இல்லை. இருவரும் காதல் குறித்தும் வாய் திறக்காமல் தங்களது கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

டாடா: கவின் நடிப்பில் 2021ம் ஆண்டு வெளியான லிஃப்ட் திரைப்படம் அவருக்கு நல்ல பெயரைப்பெற்றுத் தந்தது. அதன்பின்னர் கவின் நடிப்பில் டாடா திரைப்படம் ரசிகர்களின் வரவேற்போடு ஹிட் லிஸ்ட்டில் இணைந்தது. கல்லூரி மாணவன்,காதலன்,கணவன், அப்பா என ஒரே படத்திலேயே அனைத்து கேரக்டரிலும் நடித்திருந்தார். டாடா படத்தை இளசுகள் முதல் பெரிசுகள் வரை ரசித்து ரசித்துப் பார்த்தனர்.
விரைவில் திருமணம்: இந்த நிலையில் கவினுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வீட்டில் பெரியவர்கள் பார்த்த பெண்ணை கவினுக்கு பிடித்துவிட்டதால், அவர் ஒகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆகஸ்ட் 20ஆம் தேதி கவினுக்கு திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவின் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இணையத்தில் பரவி வரும் செய்தி எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











