KPY Bala: 18 படத்தில் நடித்து இருக்கேன்..ஆனால், படத்தில் அந்த காட்சியே வராது..வருத்தப்பட்ட KPY பாலா!
சென்னை: சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி வந்தவர் பாலா. கலக்கப்போது யாரு நிகழ்ச்சியில் தனி ஆளாக வந்து கலக்கியதால் ரசிகர்கள் அவரை, Kpy பாலா என அழைத்து வருகின்றனர். ஏழை மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை பாலா செய்து வருகிறார். பலரும் இவரை கொண்டாடி வரும் நிலையில், 18 படத்தில் நடித்து இருக்கேன், ஆனால், படம் வெளியாகும்போது நான் படத்தில் இருக்க மாட்டேன் எடிட்டிங்கில் தேவை இல்லாத சீன் என்று தூக்கிவிடுவார்கள் என்று வருத்தப்பட்டு பேசி உள்ளார்.
குக் வித் கோமாளியில் கோமாளியாக வந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த பாலா, தேவதர்ஷினியின் மகள் நியதியுடன் சேர்ந்து ஆல்பம் பாடலில் நடித்திருந்தார். அந்த பாடல் இணையத்தில் டிரெண்டானது. அப்போது அவர் அளித்த பேட்டியில், இதுவரை நான் 18 திரைப்படங்களில் நடித்திருக்கிறேன், டைட்டில் கார்டில் என்னுடைய பெயர் வரும். படத்திலும் நடித்திருப்பேன். ஆனால் அந்த போசனை எடிட் செய்து தூக்கி இருப்பார்கள். இது போல பலமுறை எனக்கு நடந்திருக்கிறது. ஆர் ஜே பாலாஜி அண்ணா ஒரு முறை என்னுடைய படத்தை பார்த்துவிட்டு, டைட்டிலில் உன்னுடைய பெயரை பார்த்தேன். ஆனால், படத்தில் உன்னுடைய போசனே வரவில்லையே என்று கேட்டார். நானும் ஆமாம் அண்ணன் என்று சொல்லி வருத்தப்பட்டேன்.

சினிமாவில் நடிக்காதே: அப்போது, அவர் உனக்காக ஒரு வாய்ப்பு வரும், பாட்டு, டான்ஸ், காமெடி, நடிப்பு என அனைத்து திறமையும் உன்னிடம் இருக்கிறது. இதனால், உனக்காக வாய்ப்பு ஒன்று உன்னை தேடி வரும் அதுவரை நீ போன்ற சின்ன சின்ன கதாபாத்திரங்களில் எல்லாம் நடிக்க வேண்டாம் என்று கூறினார். அதன் பிறகு நான் 5 ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்கவே இல்லை. அவர் சொன்னதை பாலோ பண்ணிட்டு வருகிறேன் என்றார்.
மிகவும் வருத்தப்பட்டேன்: எனக்கு ஒரு பெரிய ஜாம்பவான்கள் நடிக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. அந்த படத்திற்காக என்னை காமெடிக்காக சில ஸ்கிரிப்டுகளை கேட்டிருந்தார்கள். அந்த படத்தில் நானும் ஒரு காட்சியில் நடித்தேன். இரண்டு மூன்று காட்சிகளுக்கு நானே ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி கொடுத்தேன். அப்போது பெரிய நடிகர் ஒருவர், இந்த பையன் நல்லா பண்றான். இன்னும் சில காட்சிகளில் இந்த பையனை நடிக்க வைக்கலாம் என்றால். நானும் பெரிய நடிகர் படத்தில் வருவதை நினைத்து மிகவும் சந்தோஷப்பட்டேன். அப்போது தான், கோ டைக்டர் எனக்கு போன் செய்தார். நான் அவரிடம் நான் நடித்த சீன் எப்படி வந்து இருக்கு என்று கேட்டேன். அப்போது அவர், படத்தில் நீங்கள் நடிக்கும் காட்சிகளே வராது, அது தேவையில்லாத காட்சி ஃபேஸ் வேல்யூ என்று ஒன்று இருக்கு. உங்களை வைத்து எப்படி அந்த காட்சியை எடுப்பார்கள் என்று சொன்னார். மேலும், இந்த படத்தில் உங்களை வேலை செய்வதற்காக தான் அழைத்தார்கள் என்று சொன்னார் அதை கேட்டு நான் ரொம்ப நொந்துவிட்டேன் என்னடா இப்படி ஆகிவிட்டே என்று வருத்தப்பட்டேன் என பாலா பேசி இருந்தார்.


Click it and Unblock the Notifications