பயங்கர கார் விபத்து.. சிறு காயத்துடன் உயிர்தப்பிய சீரியல் நடிகை!
சென்னை: விஜய் டிவி சீரியல் நடிகை பயங்கரமான கார் விபத்தில் சிக்கி சிறிய காயத்துடன் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பி உள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் பெரிய அளவில் ரசிகர்களை கவர்த்து டி.ஆர்.பி-யில் டாப் 5 இடங்களை பிடித்து விடுகிறது.அப்படி விஜய் டிவியின் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல் தான் முத்தழகு.

திங்கள் முதல் சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு இத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர் இதுவரை ஆயிரம் எபிசோடுகளை கடந்து விட்டது.
சீரியல் நடிகை: இந்த முத்தழகு சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகை தான் வைஷாலி, தனது நடிப்பின் மூலம் பலரின் பாராட்டுக்களை பெற்ற இந்த நடிகை சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். அந்த வகையில், கார் விபத்தில் சிக்கி அதிஷ்டவசமாக உயிர் தப்பியதாக வைஷாலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினேன்: அந்த வீடியோவில், தென்காசியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த போது கார் விபத்துக்குள்ளானது. பைபாஸில் கார் வேகமாக வந்த போது டிவைடரில் கார் மோதி விபத்துள்ளானது. நானும், ஓட்டுநரும் சீட் பெல்ட் அணிந்து இருந்ததால் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பித்தோம், அதே போல கார் விபத்துக்குள்ளானபோது ஏர்பேக் என்னை பெரிய விபத்தில் இருந்து காப்பாற்றியது.

சீட் பெல்ட் காப்பாற்றியது: நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது சீட்பெல்ட் அவசியம் என்று பலர் சொல்லுவார்கள். அப்போது அது எனக்கு புரியவில்லை. ஆனால், இந்த பெரிய விபத்தில் இருந்து என்னை காப்பாற்றியது சீட் பெல்ட்தான், நான் சீட் பெல்ட் அணியாமல் இருந்து இருந்தால். இந்நேரம் பெரிய விபத்தில் சிக்கி இருப்பேன். இப்போது எனக்கு கழுத்தில் மட்டும் சிறிய காயமும் வலியும் இருக்கிறது.
தயவு செய்து காரில் பயணம் செய்யும் போது, சீட் பெட்டை மறக்காமல் போட்டுக்கொள்ளுங்கள், பைபாஸில் வேகமாக போகலாம் என்பதற்காக வேகமாக போகாதீர்கள் என்றார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் அவர் விரைவில் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











