மூனு வேளையும் சோறு.. காதலுக்காக உணவு பழக்கத்தை மாற்றியவர்.. மாறாதவர்.. நீயா நானா ஸ்பெஷல்!

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் சீரியல், கேம் ஷோ, ரியாலிட்டி ஷோக்கு என்று பல ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி, ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புடன் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில், இன்று காதலுக்காக உணவு பழக்கத்தை மாற்றியவர், காதலுக்காக மாறாதவர் என்ற தலைப்பில் பலர் பேசி இருக்கிறார்கள்.

விஜய் தொலைக்காட்சியில் 17 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் ஒரே நிகழ்ச்சி நீயா நானா நிகழ்ச்சி. இத்தனை ஆண்டுகளாக கோபிநாத் மட்டுமே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டும் பார்க்கப்படாமல் சமூகத்தில் சில நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் நிகழ்ச்சியாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு, வேலை பார்த்துக்கொண்டே படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் வைத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

vijaytv neeya naana gopinath

நீயா நானா நிகழ்ச்சி: இதில் பேசிய ஒரு மாணவன், அம்மாவை நல்ல இடத்தில் வைத்து பார்ப்பதற்காக மூட்டை தூக்குவதாகவும், 3 கிலோ மீட்டர் வீட்டிற்கு நடந்தே செல்வேன் என பேசி இருந்தார். அந்த மாணவன் பேசிய வீடியோ இணையத்தில் டிரெண்டானதைத் தொடர்ந்து, நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக்கழகம் நிர்வாகிகள் மூலம் அந்த மாணவனுக்கு உதவி செய்தனர். இப்படி இந்த நிகழ்ச்சி பலருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

காதலால் மாறிய உணவு: அந்த வகையில் இன்று 12.30 மணிக்கு ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் காதலுக்காக உணவு பழக்கத்தை மாற்றியவர், காதலுக்காக மாறாதவர் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய ஒரு ஆண், நான் வடமாநிலத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். திருமணமாகி அவர்களின் வீட்டுக்கு போன போது காலையில்,ஒரு பிரெட் அதில் ஒரு முட்டை வைத்து கொடுத்தார்கள் அதை என்னால், சாப்பிடவே முடியவில்லை, பசி அடங்காததால் எனக்கு மயக்கமே வந்துவிட்டது என்றார்.

மூனு வேளையும் சோறு: இதையடுத்து பேசிய அவரின் மனைவி, என் கணவர் வீட்டில் எல்லாத்துக்கும் புளிதான், கத்திரிக்காய் போட்டால் கத்திரிக்காய் கார குழம்பு, வெண்டக்காய் போட்டால் வெண்டக்காய் கார குழம்பு, அதிலேயே மீன் போட்டால் மீன் குழம்பு, ஒரே மாதிரி சமைத்து அதற்கு பெயரை மட்டும் மாற்றி வைத்துக்கொள்கிறார்கள். ஆனால், எங்கள் வீட்டில் ராஜ்மா, பட்டர் பன்னீர், பாலக் பன்னீர், தால்ஜா என வெரைட்டி வெரைட்டியாக சாப்பிடுவோம். ஆனால், இவங்க வீட்டில் மூனு வேளையும் சோறு தான். காதலிக்கும் போது ஒரே புளியை வைத்து பத்து குழம்பு செய்வார்கள் என்று தெரிந்து இருந்தால், கல்யாணமே செய்து இருக்க மாட்டேன் என்றார்.

இதைத்தொடர்ந்து பேசியவர்கள், காதலுக்காக அனைத்தையும் மாற்றியவர்களால், இந்த உணவு பழக்கத்தை மாற்றமுடியாதா என்று பேசினார்கள். உண்மையில் இன்றைய நிகழ்ச்சி சுவாரசியமாக இருந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X