மனைவி மகாலட்சுமிக்கு அல்வா கொடுத்த ரவீந்தரன்..பப்ளிக்கா இப்படி செய்யலாமா?

சென்னை : காதல் மனைவி மகாலட்சுமிக்கு பப்ளிக்கா அல்வா கொடுத்து ரவீந்தரன் வர்ணித்துள்ளார்

சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமான மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

இவர்கள் திருமணம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தாலும் இவற்றை அனைத்தையும் கண்டுகொள்ளாமல் இருவரும் விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உருகி உருகி காதலை பகிர்ந்து வருகின்றனர்.

மகாலட்சுமி, ரவீந்தர்

மகாலட்சுமி, ரவீந்தர்

தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் நடிகை மகாலட்சுமி திருமணம் திருப்பதியில் நெருங்கிய சொந்தங்கள் முன்னிலையில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் டிராண்டானது. இந்த ஜோடியை பார்த்த 90ஸ் கிட்ஸ் தங்கள் ஆதங்கத்தை சோஷியல் மீடியாவில் கொட்டிதீர்த்தனர்.

இரண்டு வருட காதல்

இரண்டு வருட காதல்

இதையடுத்து, இவர்கள் இருவரும் பல ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து, இன்னும் பிரபலமானார்கள். பலர் மகாலட்சுமி பணத்திற்காக திருமணம் செய்து கொண்டதாக கூறுகிறார்கள் ஆனால், உண்மையில் நானும் மகாலட்சுமியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டோம் என்றார். அதுமட்டும் இல்லாமல் செப்டம்பர் மாதம் முழுவதும் இணையத்தில் புயலாக இந்த ஜோடி வலம் வந்தது.

வந்தாள் மகாலட்சுமி

வந்தாள் மகாலட்சுமி

இதையடுத்து, விஜய் தொலைக்காட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வந்தாள் மகாலட்சுமி என்ற பெயரில் புது விதமான நிகழ்ச்சி இன்று மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. அந்த நிகழ்ச்சியில், புதுமண தம்பதிகளான மகாலட்சுமியும் ரவீந்திரனும் கலந்து கொண்டுள்ளனர். தற்போது அந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

விதவிதமான டாஸ்க்

விதவிதமான டாஸ்க்

அதில், புதுமண தம்பதிகளுக்கு பலவிதமான டாக்ஸ்குகளும்,கேள்விகளும் கேட்கப்படுகிறது. இதில், இரண்டு பேரில் அதிகமாக ஐ லவ் யூ சொன்னது யார் என்ற கேள்விக்கு, மகாலட்சுமி அவர் ஐ லவ் யூ சொல்லவே மாட்டாரு நான் தான் சொல்லுவேன் என்றார். இதையடுத்து, ரவீந்திரன் இதுவரை மகாலட்சுமி ஷங்கர் உன்னை பார்த்துக்கொண்டார் இனி மகாலட்சுமி ரவீந்தரன் பத்திரமாக பார்த்துக்கொள்வேன் ஐ லவ் யூ என்றார்.

 நான் சுவைத்த இனிப்பு

நான் சுவைத்த இனிப்பு

இதையடுத்து, கையில் கொடுக்கப்படும் பொருளை வைத்து மனைவி குறித்து கவிதை சொல்ல வேண்டிய டாஸ்கில்,ரவீந்தரிடம் அல்வா கொடுக்க, அதைப்பார்த்த ரவீந்தரன் "நான் சுவைத்த இனிப்பில்.. மகாலட்சுமியை விட கம்மிதான் இந்த அல்வா" என கூறி கைத்தட்டலை பெற்றார். மல்லிப்பூ கொடுக்க, பூ வாடலாம் உன் மீது வைத்திருக்கும் பாசம் மாறாது என்றார். இந்த நிகழ்ச்சி அக்டோபர் 2ந் தேதியான இன்று மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X