BB7: சும்மாவே வீடு ரெண்டாகும்.. இப்ப வீடே ரெண்டா.. பிக் பாஸ் 7 புது ப்ரோமோ வெளியானது!

சென்னை: பிக் பாஸ் 7ம் சீசன் தொடங்க இருக்கும் நிலையில் தற்போது ஒரு புது ப்ரோமோ வெளியாகி ஹைப்பை அதிகரித்துள்ளது.

பல வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாகி வரும் விஜய் தொலைக்காட்சியில் மக்களுக்கு மிகவும் பிடித்தமான நிகழ்ச்சிதான் பிக் பாஸ் நிகழ்ச்சி.

Vijay television released a Bigg boss season 7 new promo featuring Kamal Haasan

இந்த நிகழ்ச்சிக்கு ஆரம்பம் முதல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றதால், ஆறுசீசன்களை முடிந்து ஏழாவது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

உலகநாயகன்: பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஸ்பெஷலே உலக நாயகன் கமல்ஹாசன் தான். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டால் போதும், சாட்டையை எடுத்து போட்டியாளர்களை வெளுத்து வாங்கிவிடுவார். இதனால் மற்ற நாட்களில் நிகழ்ச்சியை பார்க்காதவர்கள் கூட வார இறுதி நாட்களில் தொலைக்காட்சி முன் ஆஜராகிவிடுவார்கள்.

பிக் பாஸ் சீசன் 7: ஆறு சீசன்களை இதுவரை தொகுத்து வழங்கி கமல், 7வது சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார். தற்போது, போட்டியாளர்களை தேர்ந்து எடுப்பதற்கான வேலைகளும் நடந்து வருகிறது. இதில்,கலக்கப்போவது யாரு காமெடி நடிகர் சரத், பாவனா, மாகாபா, உமா ரியாஸ் ஆகியோர் ஆடிஷனில் கலந்து இருப்பதாக கூறப்படுகிறது.

20 போட்டியாளர்கள்: மேலும், சர்ச்சை நடிகை என பெயர் எடுத்த ரேகா நாயர், பயில்வான் ரங்கநாதன், டான்ஸ் மாஸ்டல் ஸ்ரீதர், கடந்த முறை நடிகை ரக்சிதா மகாலட்சுமி கலந்து கொண்ட நிலையில் இந்த முறை நடிகர் தினேஷ் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் இந்த முறை நிகழ்ச்சியில் யார்? கலந்து கொள்ள போகிறார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் மத்தியில் அதிக ஆவல் ஏற்பட்டிருக்கிறது.

Vijay television released a Bigg boss season 7 new promo featuring Kamal Haasan

இரண்டு வீடு: இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 7ன் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது, அதில், கமல் இரட்டைவேடத்தில் வந்து எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று ட்விஸ்டை கமல் போட்டு உடைத்துள்ளார். அது என்னவென்றால் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு வீடு இல்லையாம் இரண்டு வீடு இருக்கிறதாம். சும்மாவே பிக் பாஸ் வீடு இரண்டாகும். ஆனால் இப்போது வீடே இரண்டாகப் போவதாக தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில் கூறப்பட்டுள்ளது.

புதுமாற்றம்: பிக் பாஸ் வீட்டில் வழக்கமான சண்டை, சமையல் அறை, ஜெயிலைப் பார்த்து பார்த்து அலுத்துப்போன ரசிகர்களுக்கு ஒரு புது முறையை பிக் பாஸ் டீம் கண்டுபிடித்துள்ளது. அது எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகும் என்பதை நிகழ்ச்சி ஒளிபரப்பான பின் தான் தெரியவரும். இருப்பினும், பிக் பாஸ் 7 நிகழ்ச்சிக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X