பிகில் இசை வெளியீட்டு விழா... ரசிகர்களுக்கு விஜய் முக்கிய உத்தரவு!

ரசிகர்கள் யாரும் பேனர் தனக்கு வைக்க வேண்டாம் என நடிகர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.

Recommended Video

Bigil Audio launch on september 19

சென்னை: தனது பிகில் பட இசை வெளியீட்டு விழாவின் போது ரசிகர்கள் யாரும் பேனர் வைக்க வேண்டாம் என நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ பிடெக் பட்டதாவியாவார். இவர் கனடா நாட்டில் மேற்படிப்பு படிப்பதற்காக தகுதி தேர்வை எழுதிவிட்டு அதன் முடிவுகளுக்காக காத்திருந்தார்.

Vijay tells his fans to avoid keeping banners

இந்நிலையில் நேற்று அவர் இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த போது, பள்ளிகரணை செல்லும் வழியில் எதிர்பாராதவிதமாக விபத்தில் மரணமடைந்தார். சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது சரிந்து விழுந்ததே விபத்துக்கு காரணம்.

சுபஸ்ரீ மீது பேனர் சரிந்து விழந்ததில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவ்வழியாக வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறி இறங்கியதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். இதையடுத்து பேனர் கலாசாரத்தை ஒழிக்க வேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வருகின்றன. அரசியல் தலைவர்களும் தங்களது கட்சி தொண்டர்களிடம் பேனர் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய்யும் இதுதொடர்பாக தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார். அதில், இனி தனது பட விழாக்களின் போது ரசிகர்கள் யாரும் பேனர்கள் வைக்க வேண்டாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக வரும் 19ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள தனது பிகில் பட இசை வெளியீட்டு விழாவின் போது ரசிகர்கள் யாரும் சாலையில் பேனர் வைக்க கூடாது என விஜய் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X