Vijay: ஆசை காட்டி மோசம் செய்த விஜய்... என்னடா இது இவரும் அஜித் மாதிரியே யூடர்ன் அடிச்சிட்டாரு.?

சென்னை: விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

 Vijay: Thalapathy 68 title update will not be released on Vijays birthday

லியோ ஷூட்டிங் முடியும் முன்னரே தளபதி 68 பட அபிஸியல் அப்டேட்டை வெளியிட்டார் விஜய்.

இதனால் சில குழப்பங்கள் ஏற்பட விஜய் திடீரென யூடர்ன் அடித்து தனது முடிவை மாற்றிவிட்டாராம்.

ஆசை காட்டி மோசம் செய்த விஜய்

விஜய் நடித்து வரும் லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அதிக எதிர்பார்ப்பில் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டிணத்தில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இதனிடையே சில தினங்களுக்கு முன்னர் விஜய் தனது 68வது படத்தின் அப்டேட்டை வெளியிட்டார். அதன்படி, இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல், யுவன் சங்கர் ராஜா இப்படத்தின் இசையமைப்பாளராகவும் கமிட்டானார். லியோ ஷூட்டிங் முடியும் முன்பே தளபதி 68 அப்டேட் வெளியானது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக இருந்தது.

அதுமட்டும் இல்லாமல் முதன்முறையாக வெங்கட் பிரபுவுடன் விஜய் இணைவதும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. லியோ ரிலீஸானதும் தளபதி 68 படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே விஜய்யின் பிறந்தநாள் வரும் 22ம் தேதி வரவிருக்கிறது. அதனால் அன்றைய தினம் தளபதி 68 படத்தின் ஸ்பெஷல் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதேபோல், லியோ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவும் விஜய் பிறந்தநாளில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், லியோ ரிலீஸாகும் முன்பே தளபதி 68 அப்டேட் வந்துவிட்டதால், இரண்டு படங்கள் மீதான எதிர்பார்ப்பும் குறைந்துவிட்டதாக தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்களாம். அதனால், லியோ ரிலீஸாகும் வரை தளபதி 68 அப்டேட், டைட்டில் அறிவிப்பு எதுவும் வெளியிட வேண்டாம் என பேசி முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.

இதனால், விஜய் பிறந்தநாளில் லியோ அப்டேட் மட்டுமே வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதேநேரம் தளபதி 68 படத்திற்கு CSK என்ற டைட்டிலை வெங்கட் பிரபு முடிவு செய்துள்ளாராம். மேலும் இப்படத்தில் விஜய் ஜோடியாக ஜோதிகா நடிக்கலாம் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது அதற்கும் வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. இதனால், விஜய் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X