Trisha: என்னது.. தளபதி 69ல தனலட்சுமி இல்லையா..? விஜய் - த்ரிஷாவை ஜோடியாக பார்க்க ஏங்கும் ரசிகர்கள்!
சென்னை: தளபதி விஜய்யின் 69வது படத்தின் ப்ரீ புரெடக்ஷன் வேலைகள் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகின்றது. படத்தில் யார் யார் நடிக்கின்றார்கள் என்ற அறிவிப்பை படக்குழு அதிரடியாக தெரிவித்து வருகின்றது. இப்படம் விஜய்யின் 69வது படம். மேலும் அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய்யின் கடைசிப் படம் என்பதால் இந்தப் படத்தின்மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் தற்போதுவரை நிறைவாகியுள்ளது ஒன்று என்றால் அது, இசை அமைப்பாளர்தான்.
படத்திற்கு அனிருத் இசை அமைக்கவுள்ளார் என்ற தகவலை படக்குழு ஏற்கனவே தெரிவித்துவிட்டது. மேலும் படத்தின் இயக்குநர் ஹெச். வினோத் மீது ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கை உள்ளது. காரணம் தளபதி 69இன் கதை கமல்ஹாசனுக்குச் சொல்லப்பட்ட கதை எனப் பேசப்படுவதும் ஒரு காரணம். இப்படியான நிலையில் படத்தில் நடிகை த்ரிஷா இல்லையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் விஜய்க்கு மிகவும் ஒருசில கதாநாயகிகள்தான் மிகவும் பொருத்தமான கதாநாயகிகளாக இருந்துள்ளனர். அதில் மிகவும் முக்கியமானவர் என்றால் நடிகை த்ரிஷாவைக் கூறலாம். விஜய்யும் த்ரிஷாவும் இணைந்து இதுவரை கில்லி, திருப்பாச்சி, குருவி, ஆதி மற்றும் லியோ ஆகிய படங்களில் நடித்துள்ளனர். இந்த ஜோடியை திரையில் பார்த்துவிட்டாலே ரசிகர்கள் குஷியாகிவிடுவார்கள். இப்படியான நிலையில் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான கோட் படத்திலும் 'மட்ட' பாடலுக்கு த்ரிஷா ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் படக்குழு தரப்பில் த்ரிஷா இந்தப் பாடலில் நடனமாடியுள்ளார் என ரசிகர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை. அப்படி இருக்கும்போது, திரையில் திடீரென த்ரிஷாவைப் பார்த்த ரசிகர்கள் ஆரவாரத்தில் தியேட்டரையே அதிரவைத்தனர். த்ரிஷா ஒரு பாடலுக்கு விஜய்யுடன் நடனமாடியதையே ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தபோது, விஜய்யின் கடைசி படத்தில் த்ரிஷா இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

த்ரிஷா: மட்ட பாடலில் கில்லி படத்தில் வரக்கூடிய, அப்படிபோடு பாடலுக்கு நடனம் ஆடும் நடன அசைவுகள் இடம் பெற்றது. அதனை ரசிகர்கள் பலரும், இன்ஸ்டாவில் ரீல்ஸில் நடனமாடி பதிவிட்டனர். நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து ஜோடியாக நடித்த கடைசிப் படம் என்றால் அது லியோ படத்தைச் சொல்லலாம்.

அந்தப் படத்தில் இவர்கள் இருவருக்குமான ரொமான்ஸ் காட்சிகள் சிறப்பாக இருந்தது. மேலும் இருவரும் கணவன் மனைவி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திப் போனார்கள். இப்படியான நிலையில் தளபதி 69 படத்தின் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றது.

படக்குழு: இதுவரை படக்குழு தரப்பில் இருந்து ஐந்து பேர் உறுதி செய்யப்பட்டுள்ளனர். அதில் இருவர் டெக்னீஷியனில் வந்துவிடுவார்கள். அப்படியானால் மூன்று பேர் உறுதி செய்யப்பட்டுள்ளனர். அது, விஜய், பாபி தியோல் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர்தான். படக்குழு தரப்பில் இருந்து மூன்று நாட்களுக்கு படத்தில் நடிப்பவர்கள் குறித்து தெரிவிக்கப்படும் என படக்குழு அறிவித்து, நடிகர்களை அறிவித்து வருகின்றது. முதல் இரண்டு நாட்களில் இருவரை அறிமுகப்படுத்திய நிலையில், மூன்றாவது நாளில் யாரை படக்குழு அறிமுகம் செய்யவுள்ளது என்பது குறித்து ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. அது நடிகை த்ரிஷாவாக இருக்கவேண்டும் என பல ரசிகர்களும் வேண்டிக்கொண்டு உள்ளனர்.

கேமியோ: இப்படியான நிலையில் தளபதி 69 படத்தில் த்ரிஷா இடம் பெறுவாரா, அல்லது ரசிகர்களின் ஆசையை நிறைவேற்ற படக்குழு த்ரிஷாவை எப்படியாவது ஒரு கேமியோ கதாபாத்திரத்திலோ அல்லது ஃப்ளாஷ் பேக் போர்ஷனிலாவது நடிக்க வைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


Click it and Unblock the Notifications











