Thalapathy 69: வெறித்தனமான சம்பவம் லோடிங் நண்பா.. விஜய்யின் தளபதி 69 படத்தை இயக்கும் ஹெச். வினோத்!
சென்னை: தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்றால் அது விஜய். அதேநேரத்தில் அதிக வசூலை அள்ளும் நடிகர், மாஸ் ஓப்பனிங் உள்ள நடிகர்களில் டாப் லிஸ்ட்டில் உள்ளவர் என்றாலும் அதிலும் நடிகர் விஜய் பெயர் இருக்கும். ஒரு படத்திற்கு விஜய் கிட்டத்தட்ட ரூபாய் 200 கோடி வசூல் செய்கின்றார் என கூறப்பட்டு வரும் நிலையில், சினிமாவில் இருந்து முற்றிலுமாக விலகி முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாக கூறினார். இது சினிமாத்துறையை சார்ந்தவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.
மேலும் தான் ஒப்புக்கொண்டுள்ள இரண்டு படங்களில் மட்டும் நடித்துக் கொடுத்துவிட்டு, சினிமாவில் இருந்து வெளியேறப்போவதாக கூறினார். விஜய் இதனை அறிவிக்கும்போது அவரது 68வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதுமட்டும் இல்லாமல், இந்த படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது. இந்நிலையில் படத்தின் ட்ரைலர் நாளை அதாவது ஆகஸ்ட் 17ஆம் தேதி மாலை 5 மணிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.

விஜய்யின் 69வது படத்தினை இயக்கப்போவது யார் என்ற கேள்வி பலருக்கும் இருந்து வந்தது. திரை உலகத்தினர் ஹெச். வினோத் தான் படத்தை இயக்குகின்றார் எனக் கூறி வந்தனர். ஆனால் இது குறித்து நம்பத்தகுந்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், விஜய்யின் 69வது படத்தினை ஹெச். வினோத் இயக்குவதை உறுதி செய்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டவரிம் இது தொடர்பாக கேட்கப்பட்டதற்கு பதில் அளித்து உறுதி செய்துள்ளார். இது தொடர்பான தகவல்கள் சினிமா உலகில் வேகமாக பரவிவருகின்றது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Click it and Unblock the Notifications











