Thalapathy 69: பாக்ஸ் ஆஃபீஸ் கிங்.. தளபதி விஜய்யின் கடைசி படம் அறிவிப்பு எப்போது தெரியுமா?
சென்னை: நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஒரே நடிகர் எனக் கூறலாம். அண்மையில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள தி கோட் படத்திற்கு மட்டும் இவரது சம்பளம் ரூபாய் 200 கோடி என தயாரிப்பாளரே ஒப்புக்கொண்டார். கடந்த 5ஆம் தேதிதான் கோட் படம் ரிலீஸ் ஆன நிலையில், இவரது கடைசி படமான தளபது 69 படம் குறித்த அறிவிப்பினை, தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரெடக்ஷன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது. மேலும் இது தொடர்பான அறிவிப்பு இன்று அதாவது செப்டம்பர் 13ஆம் தேதி மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கே.வி.என் புரெடெக்சன்ஸ் கம்பனியைப் பொறுத்தவரையில் தமிழ் திரையுலகில் முதல் முறையாக கால் பதிக்கின்றார்கள். அது பெரிய கதாநாயகனின் படமாகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தளபதி விஜய்யின் படத்தினைத் தயாரிக்கின்றனர். ஏற்கனவே குறிப்பிட்டத்தைப்போல், தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான தி கோட் படம், வசூலில் கெத்து காட்டி வருகின்றது. படம் வெறும் நான்கு நாட்களில் ரூபாய் 288 கோடிகளை அள்ளியது. இந்தவாரமும் தமிழில் புதுப் படங்கள் ரிலீஸ் ஆகாத காரணத்தால், கோட் படம் தியேட்டரில் நல்ல வசூலை அள்ளும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக குடும்ப ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளாதாக திரையரங்க உரிமையாளர்களே தெரிவித்துள்ளனர். கோட் படத்தில் விஜய் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடித்து அசத்தினர். அவரது 69வது படத்தில் முழுக்க முழுக்க பக்கா, கமர்ஷியல் படமாக இருக்கவேண்டும் என ஹெச். வினோத்திடம் விஜய் சொன்னதாக இயக்குநர் ஹெச். வினோத் ஊடகங்களிடம் கூறனார்.
தளபதி சம்பளம்: கோட் படத்தின் மொத்த பட்ஜெட் ரூபாய் 386 கோடிகள் என தயாரிப்பளர் அர்ச்சனா தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவே, தளபதி 69 படத்தில் விஜய்யின் சம்பளம் தொடர்பாக தமிழ்த் திரையுலகில் தகவல்கள் உலா வந்தது. அதாவது தளபதி 69 படத்திற்கு விஜய்யின் சம்பளம் மட்டும் ரூபாய் 275 கோடிகளாம். இதுமட்டும் இல்லாமல், ஜி.எஸ்.டியும் தயாரிப்பு நிறுவனமே செலுத்த ஒப்புக்கொண்டதாக கூறப்படுகின்றது. அதாவது, விஜய்யின் சம்பளத்திற்காக மட்டும் தயாரிப்பு நிறுவனம் ரூபாய் 300 கோடிகள் வரை செலவு செய்கின்றதாம். மொத்தத்தில் படத்தின் பட்ஜெட் சுமார் 450இல் இருந்து 500 கோடிகள் வரை இருக்கும் என கூறப்படுகின்றது.

ஹெச். வினோத்: ஏற்கனவே படத்தின் இயக்குநர் ஹெச். வினோத் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இப்படி இருக்கும்போது, இந்த அறிவிப்பின்போது படத்தில் வேறு யாரெல்லாம் நடிக்கின்றார்கள் என்ற தகவல்களும் இடம் பெறுமா என்ற கேள்வி ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி, அரசியலில் கவனம் செலுத்தவுள்ளதால், இந்தப் படம்தான் அவரது கடைசி படம். எனவே இந்தப் படத்தின் மீது அனைவருக்கும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இசை அமைப்பாளர்: குறிப்பாக படத்தின் கதாநாயகி, படத்தின் இசை அமைப்பாளர் யார் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது. கோட் படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக எந்தவிதமான ஈர்ப்பினையும் ஏற்படுத்தவில்லை. மட்ட பாடல் மட்டும் செம ட்ரெண்ட் ஆனது. எனவே, இந்தப் படத்திற்கு யார் இசை அமைப்பாளர் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. அனிருத் அல்லது ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைப்பாளராக இருக்க வேண்டும் என ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டு உள்ளனர்.


Click it and Unblock the Notifications











