Thalapathy 69: ஷூட்டிங்கே ஆரம்பிக்கல.. தளபதி 69க்கு வந்த பிரச்னை.. விஜய் படம்னாலே பிரச்னைதான் போல!

சென்னை: தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்,அதேநேரத்தில் அதிக வசூலை அள்ளும் நடிகர், மாஸ் ஓப்பனிங் உள்ள நடிகர் என்றால் அது விஜய்தான். ஒரு படத்திற்கு விஜய் கிட்டத்தட்ட ரூபாய் 200 கோடி வசூல் செய்கின்றார் என கூறப்பட்டு வரும் நிலையில், சினிமாவில் இருந்து முற்றிலுமாக விலகி முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாக கடந்த பிப்ரவரி மாதம் கூறினார். மேலும் தான் ஒப்புக்கொண்டுள்ள படங்களில் நடித்து முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகப்போவதாகவும் கூறியிருந்தார். இது சினிமாத்துறையை சார்ந்தவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

விஜய் இதனை அறிவிக்கும்போது அவரது 68வது படமான தி கோட் படத்தில் நடித்துக்கொண்டு இருந்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது. இந்நிலையில் படத்தின் ட்ரைலர் இன்று அதாவ்து ஆகஸ்ட் 17ஆம் தேதி மாலை 5 மணிக்கு ரிலீஸ் ஆகியுள்ளது. ட்ரைலரைப் பார்த்த ரசிகர்கள் படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கப்போவதாக கூறி வருகின்றனர். இதுமட்டும் இல்லாமல், வெங்கட் பிரபுவையும் கொண்டாடி வருகின்றனர்.

Vijay Thalapathy 69 Vijay 69 69 69

விஜய்யின் 69வது படத்தினை இயக்கப்போவதாக இயக்குநர் ஹெச். வினோத் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும்போது தெரிவித்தார். மேலும் இந்தப் படம் அரசியல் படமாக இருக்காது எனவும், படம் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் விதமாக இருக்க வேண்டும் எனவும் விஜய் கூறியதால், அதற்கு ஏற்ற வகையில் படத்தின் கதை மற்றும் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது எனக் கூறினார். தனது 69வது படத்திற்குப் பின்னர் சினிமாவில் இருந்து விலகவுள்ளதால், கமர்ஷியல் படத்தினை எடுக்கலாம் என முடிவெடுத்துள்ளதாகவும் அதனால்தான் இயக்குநர் ஹெச். வினோத்திடம் இவ்வாறு கூறியதாகவும் கூறப்படுகின்றது. மேலும் இந்தப் படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் யார் என்ற தகவலை அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

தளபதி 69: தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கவுள்ளது என திரைத்துறை வட்டாரங்களில் பேச்சுகள் அடிபடுகின்றது. அதாவது தி கோட் படம் ரிலீஸ் ஆகி ஒரு மாதத்திற்குப் பின்னர் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்திற்கு உள்ள பிரச்னை என்னவென்றால், தயாரிப்பாளர் சங்கம் அண்மையில் வெளியிட்ட தீர்மானங்கள்தான். அதாவது தயாரிப்பாளர் சங்கத்திற்கும் நடிகர்களுக்கும் இடையே உள்ள பிரச்னைகள் தீர்க்கப்படவேண்டும் எனும் நோக்கில், நவம்பர் 1ஆம் தேதியில் இருந்து படப்பிடிப்புகள் நடத்தக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.

Vijay Thalapathy 69 Vijay 69 69 69

பிரச்னை: மேலும் தயாரிப்பாளர் சங்கத்தினர் முன்வைத்துள்ள பிரச்னைகள் தீர்க்க நடிகர் சங்கத்தினர் முயற்சித்து வந்தாலும், அதனை அக்டோபர் மாத இறுதிக்குள் சரிசெய்ய முடியுமா என்ற கேள்வி எழுகின்றது. இதனால் அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கும் தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 31ஆம் தேதிக்குள் முடிக்க முடியாது. இதனால் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டால், விஜய் திட்டமிட்டுள்ளபடி, அவரது அரசியல் பயணத்தை தொடங்குவதில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் வழக்கமாக விஜய் படம் என்றால் ரிலீஸின் போதுதான் பிரச்னை வரும், இந்தப் படத்தின் தொடக்கத்தின்போதே பிரச்னை எழுகின்றதே என பேச்சுகள் அடிபடுகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X