Vijay: லியோ தயாரிப்பாளர் வீட்டில் விசேஷம்... மாஸ்ஸாக என்ட்ரி கொடுத்த தளபதி விஜய்!

சென்னை: விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார்.

முன்னதாக அவர் நடித்த லியோ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

லியோ படத்தை விஜய்யின் உறவினர் லலித் குமார் தனது செவன் ஸ்க்ரீன் பேனரில் தயாரித்திருந்தார்.

இந்நிலையில், லலித் குமாரின் மகன் திருமண வரவேற்பில் விஜய் கலந்துகொண்ட போட்டோ வைரலாகி வருகிறது.

 Vijay: Thalapathy Vijay at producer Lalit Kumar Sons wedding reception

லலித் குமார் மகன் திருமண வரவேற்பில் விஜய்: தளபதி விஜய்யின் லியோ திரைப்படம் கடந்த மாதம் 19ம் தேதி ரிலீஸானது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்தை விஜய்யின் உறவினர் லலித் குமார் தயாரித்திருந்தார். ஏற்கனவே விஜய்யின் மாஸ்டர் படத்தையும் லலித் குமார் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர், லியோ தவிர மகான், காத்துவாக்குல ரெண்டு காதல், கோப்ரா உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ லலித் குமார், விஜய்யின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. குறுகிய காலத்திலேயே பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுவனமாக மாஸ் காட்டி வருகிறது செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ. இந்நிலையில் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தளபதி விஜய்யும் கலந்துகொண்டார். மணமக்களுடன் விஜய் எடுத்துக்கொண்ட போட்டோவை ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர். தளபதி 68 பட பூஜையில் விஜய்யின் கெட்டப் வித்தியாசமாக இருந்தது. ஆனால், லலித் குமார் மகன் திருமண வரவேற்பில், லியோ பட கெட்டப்பில் விஜய் பங்கேற்றதும் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளது.

மணமக்கள் அருகே மேடையில் நின்றபடி ரசிகர்களை நோக்கி கை அசைத்து வைப் கொடுத்தார் விஜய். இந்த போட்டோவில் தயாரிப்பாளர் லலித் குமாரும் விஜய் அருகே நின்று கொண்டிருக்கிறார். தளபதி 68 ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் விஜய், லலித் குமார் வீட்டு விசேஷத்தில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்ற திரை நட்சத்திரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X