Vijay: என்ன.. அஜித் மாதிரி விஜய்யும் டூர் கிளம்பிட்டாரு..? ஆனா, இது ‘அந்த ரூட்டு’ மாதிரி தெரியுதே!

சென்னை: கோலிவுட் டாப் ஹீரோவான விஜய், தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படம் ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

இதனையடுத்து விஜய் நடிக்கும் படம் பற்றிய அப்டேட் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில், விரைவில் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செல்ல முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

 Vijay: Thalapathy Vijay decided to tour Tamil Nadu for politics

விஜய்யின் தமிழ்நாடு சுற்றுப்பயணம்: வாரிசு படத்தைத் தொடர்ந்து லியோ படப்பிடிப்பில் பிஸியாக காணப்படுகிறார் தளபதி விஜய். ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் இடைவெளி விடும் விஜய், வாரிசு ரிலீஸானதுமே லியோ ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். அதேநேரம் லியோவை தொடர்ந்து அவர் நடிக்கவுள்ள தளபதி 68 படம் குறித்து இன்னும் அப்டேட் எதுவும் வரவில்லை.

இதனிடையே, விஜய் திடீரென இன்ஸ்டாகிராமில் கணக்குத் தொடங்கினார். இதுவரை டிவிட்டரில் மட்டுமே அக்கவுண்ட் வைத்திருந்த விஜய், இன்ஸ்டாவிலும் என்ட்ரியானது குறித்து பெரிய விவாதமே நடந்தது. இறுதியாக விரைவில் அரசியலில் களமிறங்க விஜய் முடிவுசெய்துள்ளதாகவும், அதனால் தான் இன்ஸ்டாகிராமில் விஜய் அக்கவுண்ட் தொடங்கியதாக சொல்லப்படுகிறது.

 Vijay: Thalapathy Vijay decided to tour Tamil Nadu for politics

தற்போதைய சூழலில் சமூக வலைத்தளங்கள் தான் அரசியல், சினிமா உட்பட அனைத்துவிதமான ப்ரொமோஷன்களுக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதன் ஒருபகுதியாக தான் இளைஞர்கள் அதிகம் விரும்பும் இன்ஸ்டாவில் விஜய் கணக்குத் தொடங்கியுள்ளார் என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செல்ல விஜய் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக நடிகர் விஜய்யே நேரடியாக தனது மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளாராம். விஜய் மக்கள் இயக்கத்தை பலப்படுத்துவதற்காக விரைவில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி முதலில் புஸ்ஸி ஆனந்த் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்யவுள்ளாராம்.

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, ஏற்கனவே ஆன்லைன் சேர்க்கை வேகமாக நடைபெற்று வருகிறது. இதன் அடுத்தக்கட்டமாக விஜய் மக்கள் இயக்கத்தை பலப்படுத்த தமிழ்நாடு முழுவதும் டூர் அடித்தால் நல்ல பலன் கிடைக்கும் என விஜய் திட்டமிட்டுள்ளாராம். சினிமாவை கடந்து சீக்கிரமே அரசியலிலும் ஒரு ரவுண்டு அடிக்க விஜய் ரெடியாகிவிட்டது உறுதியாகியுள்ளது.

 Vijay: Thalapathy Vijay decided to tour Tamil Nadu for politics

புஸ்ஸி ஆனந்த் சென்று வந்ததும், விஜய்யும் ஒரு டூர் அடிக்க முடிவெடுத்துள்ளாராம். சமீபத்தில் இந்தியா முழுவதும் நடை பயணம் மேற்கொண்ட ராகுல் காந்திக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே ஃபார்மட்டில் தமிழ்நாடு முழுக்க விஜய் டூர் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக, அதிமுக கட்சிகளைத் தவிர தமிழக அரசியலில் வேறு யாரும் தடம் பதிக்க முடியவில்லை.

இதனை மாற்ற வேண்டும் என தேமுதிக கட்சி சார்பாக களமிறங்கிய விஜயகாந்துக்கு ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு காணப்பட்டது. ஆனால், தற்போது விஜயகாந்தும் அவரது கட்சியும் பழைய ஃபார்மில் இல்லை. அதனால் விஜய் தனது என்ட்ரியை கொடுக்கலாம் என சொல்லப்படுகிறது. அதற்கான முன்னோட்டம் தான் இந்த தமிழ்நாடு டூர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய்யின் மக்கள் இயக்கம் தொடங்கும் போது, அந்த விழாவுக்கு நயன்தாராவும் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 2024 நாடாளுமன்ற தேர்தல் இல்லையென்றாலும், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் அரசியலில் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் லோக்கல் பாடி எலக்ஷனில் மாஸ் காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X