Vijay: ஒரே வருடம்... 3 படங்கள் தான்... பல நூறு கோடிகளுக்கு அதிபதியான தளபதி விஜய்!

சென்னை: கோலிவுட் டாப் ஹீரோக்களில் மிக முக்கியமானவர் தளபதி விஜய்.

வாரிசு படத்தைத் தொடர்ந்து லோகேஷ் இயக்கும் லியோவில் நடித்து வருகிறார்.

லியோ படத்தின் ஷூட்டிங் முடியும் முன்னரே தளபதி 68 அப்டேட்டை வெளியிட்டார் விஜய்.

வாரிசு, லியோ, தளபதி 68 படங்கள் மூலம் ஒரே ஆண்டில் பல நூறு கோடிகளை தட்டித் தூக்கிவிட்டாராம் தளபதி விஜய்.

 Vijay: Thalapathy Vijay earned an income of 300 crores in a single year

விஜய் ஆண்டு வருமானம் இத்தனை கோடியா? கோலிவுட் ரசிகர்களின் இளைய தளபதியாக வலம் வந்த விஜய், தற்போது வசூலில் மெகா மாஸ்டராக கலக்கி வருகிறார். கடந்த சில வருடங்களாகவே ஆண்டுக்கு ஒரு படத்தில் மட்டுமே நடித்து வந்த விஜய், தற்போது அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறார். பீஸ்ட் வெளியான உடனே வாரிசு படத்தில் நடித்தார் விஜய்.

இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக வெளியான வாரிசு, பாக்ஸ் ஆபிஸில் 300 கோடி வரை வசூலித்தது. தமிழ், தெலுங்கு மொழிகளில் ரிலீஸான இந்தப் படத்தை வம்ஷி பைடிபள்ளி இயக்க தில் ராஜூ தயாரித்திருந்தார். வாரிசு படத்திற்காக விஜய்க்கு ரூ. 125 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. வாரிசு வெளியான அதேவேகத்தில் லியோ படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார் விஜய்.

 Vijay: Thalapathy Vijay earned an income of 300 crores in a single year

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகும் லியோவை, லலித் குமார் தயாரித்து வருகிறார். இந்தப் படத்திற்காக விஜய்க்கு 120 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லியோ ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும் போதே தனது 68வது படத்தின் அறிவிப்பை விஜய்யே அபிஸியலாக அறிவித்துவிட்டார்.

அதன்படி, தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. லியோ ஷூட்டிங் முடிந்ததுமே தளபதி 68 தொடங்கப்படும் எனத் தெரிகிறது. முக்கியமாக இந்தப் படத்தின் ப்ரீ-ரிலீஸ் பிசினஸ் 400 கோடி ரூபாய் வரை தொட்டுவிட்டதால், விஜய்க்கு ரூ.200 கோடி சம்பளம் கொடுக்க ஏஜிஎஸ் ரெடியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இது உறுதியான தகவல் இல்லையென்றாலும், குறைந்தது 125 கோடி கன்ஃபார்ம் என்றே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 Vijay: Thalapathy Vijay earned an income of 300 crores in a single year

அதன்படி பார்க்கும் போது ஒரே ஆண்டில் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் ஈட்டி தலைசுற்ற வைத்துள்ளார் விஜய். இதன்மூலம் கோலிவுட்டில் இதுவரை வேறு எந்த நடிகரும் தொட முடியாத உச்சத்தை விஜய் தொட்டுவிட்டதாகவே சொல்லப்படுகிறது. விஜய்யின் படங்களுக்கு தரமான ஓபனிங் இருப்பதால், தயாரிப்பாளர்களும் அவர் கேட்கும் சம்பளம் கொடுக்க ரெடியாகவுள்ளனர். அதனால், ஒரே ஆண்டில் சர்வசாதாரணமாக 300 கோடிகளுக்கு அதிபதியாகிவிட்டார் விஜய்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X