Vijay: விரைவில் அரசியல் கட்சி அறிவிப்பு... ஆனால் தேர்தலில் போட்டியில்லை... ரசிகர்களை குழப்பும் விஜய்

சென்னை: விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது. இன்னொரு பக்கம் அரசியலில் களமிறங்கவும் முடிவு செய்துள்ளார் விஜய். அதன்படி விஜய்யின் அரசியல் கட்சி பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியல் கட்சியை அறிவிக்கும் விஜய்
கோலிவுட்டின் மாஸ் ஹீரோவான விஜய் தற்போது தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தின் டைட்டில் புத்தாண்டு ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற தலைப்பில் தளபதி 68 உருவாகி வருகிறது. இதனிடையே விஜய் அரசியலில் களமிறங்கலாம் என்ற பேச்சும் அதிகம் வெளியாகி வருகின்றன.

 Vijay: Thalapathy Vijay is Going To Announce His Political Party By This Year

ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் விஜய் ரசிகர்கள் ஏராளமான மக்கள் நல பணிகள் செய்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் பரிசும் நிதி உதவியும் வழங்கினார் விஜய். பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விஜய்யே நேரிடையாக மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், சில தினங்களுக்கு முன்னர் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார். தொடர்ச்சியாக மக்கள் நல பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் விஜய். இதனால் விரைவில் விஜய் அரசியல் கட்சி தொடங்குவார் என செய்திகள் வெளியாகின. அதேநேரம் இவரும் ரஜினி மாதிரியே 'அரசியலுக்கு வருவேன் வருவேன்' என சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவாரா என ரசிகர்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விரைவில் அரசியல் கட்சியை அறிவிக்க முடிவு செய்துவிட்டாராம் விஜய். அதன்படி இந்தாண்டு விஜய்யின் அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது. மிகப் பெரிய மாநாடு நடத்தி அப்போது அரசியல் கட்சியை அறிவிக்க விஜய் பிளான் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் விஜய் இனி அரசியலில் மட்டும் தான் கவனம் செலுத்தப் போகிறாரா எனவும் கேள்விகள் எழுந்தன.

ஆனால், தி கிரேட்டஸ்ட் ஆஃல் ஆல் டைம் படத்தில் நடித்து வரும் விஜய், விரைவில் தளபதி 69ல் நடிக்கவுள்ளாராம். அதனைத் தொடர்ந்து தளபதி 70 படமும் அடுத்தாண்டுக்குள் வெளியாகும் என விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சியை மட்டும் தொடங்கவுள்ள விஜய், இப்போதைக்கு அவர் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என முடிவு செய்துள்ளாராம். முக்கியமாக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிட மாட்டார் என புஸ்ஸி ஆனந்த் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் இருக்கும் போது, அடுத்து அரசியல் கட்சியை தொடங்கும் விஜய், அவர் மட்டும் தேர்தலில் போட்டியிடவில்லை என முடிவு செய்துள்ளது ஏன் என ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X